• March
    28
    Saturday

Main Area

Main



தில்லுக்கு துட்டு 2 வெளியாகும் தேதி அறிவிப்பு

santhanam
santhanam

சென்னை: சந்தானம் நடித்துள்ள ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

2016-ஆம் ஆண்டு ‘லொள்ளு சபா’ இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் மற்றும் அஞ்சல் சிங் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் தில்லுக்கு துட்டு. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை ராம்பாலாவே இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துக்கு ஜோடியாக ஸ்ரீதா சிவதாஸ் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் எப்போது வெளியாகும் என்ற தகவல்கள் கிடைத்துள்ளது.

’தில்லுக்கு துட்டு 2’ திரைப்படம் யு/ஏ சான்றிதழுடன் வருகிற பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். முதல் பாகம் போலவே இந்தப் படமும் வெற்றி தேடித்தருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

2018 TopTamilNews. All rights reserved.