• April
    09
    Thursday

Main Area

Main



ஹிட் கொடுத்த படத்தின் இயக்குநருடன் மீண்டும் கைக்கோர்த்த சந்தானம்! 

சந்தானம்
சந்தானம்

சந்தானம் நடிக்க உள்ள புதிய படத்தின் பூஜை இன்று தொடங்கியுள்ளது. 

இயக்குநர் ஜான்சன்.கே இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம்  'A1'. இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியில் பிரமாண்ட வெற்றியை பெற்ற இந்த படத்தின் நகைச்சுவை காட்சிகளும், வசனங்களும், பாடல்களும் சந்தானத்தின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் கவர்ந்தன. அதுமட்டுமின்றி பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்கள பயனாளர்கள், விமர்சகர்கள் என்று அனைவரது பாராட்டுகளையும் பெற்றது. 

sandhanam's New movie

இந்நிலையில் இந்தக் கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பூஜை இன்று தொடங்கியுள்ளது. இதில் சந்தானம், இயக்குநர் ஜான்சன்.கே, 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்ட படக்குழுவினருடன் தயாரிப்பாளர் மதன் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக கே.குமார் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார். A1 படத்தைப் போலவே இந்தப் படமும் நல்ல நகைச்சுவை விருந்தாக அமையும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

2018 TopTamilNews. All rights reserved.