• August
    18
    Sunday

Main Area

Main



'கறிக் கொழம்புல எலும்பு.. உன் கதையே வேணாம் கிளம்பு': சந்தானத்தின் ஏ1டீஸர் இதோ

சந்தானம்
சந்தானம்
Loading...

சென்னை: நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'ஏ1' படத்தின் இரண்டாவது  டீசர் வெளியாகியுள்ளது.

தில்லுக்கு துட்டு 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் ஏ1. நாளைய இயக்குநர் சீசன் 4இல் வெற்றி பெற்ற ஜான்சன் இயக்கியுள்ள இந்த படத்தைத் தாரா அலிசா பெர்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மொட்ட ராஜேந்தர், சாய் குமார், சாமிநாதன், மனோகர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

santhanam

இந்த நிலையில் ஏ1 படம் வருகின்ற ஜூலை 26ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது. ஒரு நிமிடம் 37 நொடிகள் இடம்பெறும் இந்த டீஸர், இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக' எனும் டோனில் தொடங்கவுள்ளது. டீசர் முழுவதுமே அதே டோனில் தான்உள்ளது. 'கறிக்கொழம்புல எழுப்பு உன் கதையே வேணாம் கிளம்பு' என்பது போன்ற சந்தானத்தின் தெறிக்கவிடும் கவுண்டர் பட்டாய கிளப்பி வருகிறது. 

இந்த படம் காமெடி கலந்த காதல் கதையாகத் தயாராகியுள்ளது. இதுவரை சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களில் தில்லுக்கு துட்டு தவிர வேறு எந்த படங்களும் பெயர் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. அதனால் ஏ1 படம் அந்த பெயரை வாங்கி தருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

2018 TopTamilNews. All rights reserved.