உடுமலை சங்கர் கொலை: ஆணவக் கொலையா… கூலிப்படை கொலையா? -உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

 

உடுமலை சங்கர் கொலை: ஆணவக் கொலையா… கூலிப்படை கொலையா? -உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த சங்கரும் கெளசல்யாவும் காதலித்தனர். இக்காதலுக்குக் கெளசல்யா வீட்டில் சம்மதம் தெரிவிக்காத நிலையில், இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு மார்ச் 13-ம் நாள் உடுமலைப் பேட்டைக் கடைத்தெருவில் உடை எடுப்பதற்காகச் சங்கரும் கெளசல்யாவும் வந்திருந்தபோது சில நபர்கள் இருவரையும் கடைத்தெருவிலேயே அரிவாளால் தாக்கினர். அதில் சங்கர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். படுகாயம் அடைந்த கெளசல்யா பல மாத சிகிச்சைக்குப் பிறகு இயல்புக்குத் திரும்பினார்.

உடுமலை சங்கர் கொலை: ஆணவக் கொலையா… கூலிப்படை கொலையா? -உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

சங்கர் கொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் கெளசல்யாவின் அப்பா சின்னசாமியையும் சேர்த்து 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்தது. கெளசல்யாவின் அம்மா அன்னலட்சு உள்ளிட்டோரை வழக்கிலிருந்து விடுதலை செய்தது. இதன் மேல் முறையீட்டு வழக்கில், ஜூன் 22-ம் தேதி தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதி மன்றம், சாட்சிகளுடன் சரிவர நிருபிக்காததால் கெளசல்யாவின் தந்தை சின்னசாமியை வழக்கிலிருந்து விடுதலை செய்தது. மேலும் 5 பேரின் மரணத் தண்டனையை ஆயுள் தண்டனையாகவும் குறைத்தது.

சென்னை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவிருப்பதாகக் கெளசல்யா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இத்தீர்ப்பை ஒட்டி தமிழ்நாடு அரசை நோக்கி கேள்வி ஒன்றை எழுப்பி ட்விட் செய்திருக்கிறார். அதில்,

 

கவுசல்யாவின் தந்தை ,தாய் ,தாய்மாமா பாண்டித்துரை மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ‘அப்படியெனில் இது ஆணவக்கொலையல்ல, கூலிப்படை கொலையா’ என்ற கேள்விக்குப் பட்டபகலில் பலரின் முன்னால் நடந்த கொலை வழக்கை சரியான ஆதாரம், சாட்சியங்களுடன் நடத்தாத அரசே பதிலளிக்க வேண்டும்! ” என்று குறிப்ப்பிட்டுள்ளார்.