சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சஞ்சிப் பானர்ஜி!

சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சஞ்சிப் பானர்ஜி!

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி கடந்த மாதம் 31ம் தேதி ஓய்வு பெற்றார். அதனால், புதிய தலைமை நீதிபதியாக கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து வந்த சஞ்சிப் பானர்ஜி பெயரை உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது.

சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சஞ்சிப் பானர்ஜி!

கொல்கத்தா, ஒடிசா, டெல்லி உட்பட பல நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றிய சஞ்சிப் பானர்ஜி, நிறுவன சட்டங்கள், சமரச தீர்வு உள்ளிட்டவற்றில் சிறந்தவர் என கொலிஜியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கொலிஜியத்தின் இந்த பரிந்துரையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சிப் பானர்ஜியை நியமிக்க ஒப்புதல் அளித்தார்.

சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சஞ்சிப் பானர்ஜி!

இந்த நிலையில், சென்னை கிண்டி ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் தலைலை நீதிபதியாக சஞ்சிப் பானர்ஜி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்றுக் கொண்டனர். 1862ல் உதயமான சென்னை உயர்நீதிமன்றத்தின் 50ஆவது, சுதந்திரத்திற்கு பின் 31ஆவது நீதிபதியாக சஞ்சிப் பதவியேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.