நிதிஷ் குமார் மரியாதையுடன் விடைபெற வேண்டும்… மக்கள் அவருக்கு ஓய்வு அளிப்பார்கள்.. சஞ்சய் ரவுத்

நிதிஷ் குமார் மரியாதையுடன் விடைபெற வேண்டும்… மக்கள் அவருக்கு ஓய்வு அளிப்பார்கள்.. சஞ்சய் ரவுத்

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மரியாதையுடன் விடைபெற வேண்டும். மக்கள் அவருக்கு ஓய்வு அளிப்பார்கள் என்று சிவ சேனாவின் சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.

ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீகாரின் முதல்வருமான நிதிஷ் குமார், அம்மாநில சட்டப்பேரவையின் 3ம் கட்ட தேர்தலின் கடைசி பிரச்சார நாளில் (நவம்பர் 5), தற்போதைய 2020 சட்டப்பேரவை தேர்தல்தான் என்னுடைய கடைசி தேர்தல் என்று அறிவித்தார். கடந்த 15 ஆண்டுகளாக பீகார் முதல்வராக இருந்து வரும் நிதிஷ் குமார் திடீரென இதுதான் தனது கடைசி தேர்தல் அறிவித்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

நிதிஷ் குமார் மரியாதையுடன் விடைபெற வேண்டும்… மக்கள் அவருக்கு ஓய்வு அளிப்பார்கள்.. சஞ்சய் ரவுத்
நிதிஷ் குமார்

நிதிஷ் குமாரின் அறிவிப்பு குறித்து சிவ சேனாவின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ரவுத் கூறுகையில், நிதிஷ் ஜி மிகப்பெரிய தலைவர். அவர் தனது விளையாட்டை விளையாடியுள்ளார். இதுதான் தனது கடைசி தேர்தல் என்று ஒரு தலைவர் சொன்னால், அவர் மரியாதையுடன் விடை பெற வேண்டும். அவர் விடைபெறும் சந்தர்ப்பத்திற்காக பீகார் மக்கள் காத்திருந்தனர். இந்த தேர்தலில் அவருக்கு மக்கள் ஓய்வு அளிப்பார்கள் என தெரிவித்தார்.

நிதிஷ் குமார் மரியாதையுடன் விடைபெற வேண்டும்… மக்கள் அவருக்கு ஓய்வு அளிப்பார்கள்.. சஞ்சய் ரவுத்
தேர்தல்

பீகார் சட்டப்பேரவை தேர்தலின் 3ம் கட்ட தேர்தல் மொத்தம் 16 மாவட்டங்களில் 78 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்றது. பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வரும் 10ம் தேதி வெளியாகும்.