எல்லையில் என்ன நடந்தாலும் அதற்கு நேரு, இந்திரா அல்லது ராகுல் காந்தி பொறுப்பேற்க முடியாது… சிவ சேனா

எல்லையில் என்ன நடந்தாலும் அதற்கு நேரு, இந்திரா அல்லது ராகுல் காந்தி பொறுப்பேற்க முடியாது… சிவ சேனா

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், சிவ சேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சஞ்சய் ரவுத் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எல்லை என்ன நடந்தாலும் அதற்கு ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி அல்லது ராகுல் காந்தியை நாம் பொறுப்பு சொல்ல முடியாது. 20 ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்ததற்கு நாம் அனைவரும் பொறுப்பு. பிரதமர் மோடி என்ன முடிவு எடுத்தாலும் அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்கும் ஆனால் என்ன தவறு நடந்தது என்பதை அவர் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எல்லையில் என்ன நடந்தாலும் அதற்கு நேரு, இந்திரா அல்லது ராகுல் காந்தி பொறுப்பேற்க முடியாது… சிவ சேனா

முன்னதாக சஞ்சய் ரவுத் டிவிட்டரில், சீனாவின் திமிர்தனத்துக்கு எப்போது தகுந்த பதிலடி கொடுக்கப்படும்? ஒரு குண்டு கூட பாயாமல் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். நாம் என்ன செய்தோம்? சீன வீரர்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? நமது எல்லைக்குள் சீனா நுழைந்ததா? போராட்டமான இந்த நேரத்தில் பிரதமருடன் நாடே உள்ளது ஆனால் உண்மை என்ன? பேசுங்க. ஏதாவது பேசுங்க.

எல்லையில் என்ன நடந்தாலும் அதற்கு நேரு, இந்திரா அல்லது ராகுல் காந்தி பொறுப்பேற்க முடியாது… சிவ சேனா

நாடு உண்மை தெரிந்து கொள்ள விரும்புகிறது. ஜெய் ஹிந்த் என பதிவு செய்து இருந்தார். மேலும் சஞ்சய் ரவுத் மற்றொரு டிவிட்டில், பிரதமர் மந்திரி நீங்கள் வீரர் மற்றும் ஒரு போர் வீரர். உங்கள் தலைமையின்கீழ் நம் நாடு சீனாவை பழிதீர்க்கும் என தெரிவித்து இருந்தார். இந்த டிவிட்டுகள் இந்தியில் பதிவு செய்ய்பபட்டு இருந்தது.