மோடிதான் லாக்டவுன் விதித்தார்.. கோயில்களை மூடும் முடிவையும் எடுத்தார்.. பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்த சிவ சேனா

மோடிதான் லாக்டவுன் விதித்தார்.. கோயில்களை மூடும் முடிவையும் எடுத்தார்.. பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்த சிவ சேனா

கோயில்கள் திறப்பு விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடிதான் லாக்டவுனை விதித்தார், கோயில்களை மூடும் முடிவையையும் அவர்தான் எடுத்தார் என்று பா.ஜ.க.வுக்கு சிவ சேனா பதிலடி கொடுத்துள்ளது.

மத்திய அரசு லாக்டவுன் தளர்வுகளை அறிவித்ததையடுத்து பெரும்பாலான மாநிலங்கள் வழிபாடு தலங்களை பொதுமக்களுக்காக திறந்து விட்டன. ஆனால் மகாராஷ்டிராவில் அம்மாநில அரசு கோயில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கவில்லை. இதனையடுத்து கடந்த மாதம் சித்திவிநாயகர் கோயில் உள்பட பல கோயில் பகுதிகளில் வழிபாட்டு தலங்களை திறக்கக்கோரி பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் நவம்பர் 16ம் தேதி (இன்று) முதல் மகாராஷ்டிராவில் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கடந்த சனிக்கிழமையன்று அறிவித்தார்.

மோடிதான் லாக்டவுன் விதித்தார்.. கோயில்களை மூடும் முடிவையும் எடுத்தார்.. பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்த சிவ சேனா
பிரதமர் மோடி

இதனையடுத்து மதவழிபாட்டு தலங்களை மீண்டும் திறப்பது இந்துத்துவாவின் வெற்றி என்று பா.ஜக. தெரிவித்தது. இந்நிலையில் பா.ஜ.க.வின் இந்துத்துவா வெற்றி கருத்து குறித்து சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத்திடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி லாக்டவுனை விதித்தார், கோயில்களை மூடும் முடிவையையும் அவர்தான் எடுத்தார். ஆகையால் இந்த விவகாரத்தில் (மத வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறப்பு) இந்துத்துவாவின் வெற்றிக்கு பா.ஜ.க. உரிமை கோரக்கூடாது. அத்தகைய மக்களுக்கு வெற்றி மற்றும் தோல்வியின் அர்த்தம் குறித்து பிரதமர் மோடி சொல்வார் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

மோடிதான் லாக்டவுன் விதித்தார்.. கோயில்களை மூடும் முடிவையும் எடுத்தார்.. பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்த சிவ சேனா
சஞ்சய் ரவுத்

மகாராஷ்டிரா அமைச்சரவை அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், கொரோனா வைரஸ் நோயாளிகள் குறைவாக இருக்கும் போது இந்த முடிவு சரியான முடிவு வந்துள்ளது. அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் விதிமுறைகள் ஒரே மாதிரியாக இருக்கும். மாஸ்க், சானிடைசர் பயன்படுத்துவது கட்டாயம், சமூக இடைவெளி மிகவும் முக்கியம் என்று தெரிவித்தார்.