பீகார் சட்டப்பேரவை தேர்தலில் சிவ சேனா போட்டியிடுவது குறித்து உத்தவ் தாக்கரே முடிவு செய்வார்… சஞ்சய் ரவுத்

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் சிவ சேனா போட்டியிடுவது குறித்து உத்தவ் தாக்கரே முடிவு செய்வார்… சஞ்சய் ரவுத்

பீகாரில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் சிவ சேனா போட்டியிடுவது தொடர்பாக உத்தவ் தாக்கரே முடிவு செய்வார் என அந்த கட்சியின் சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசின் ஆட்சி காலம் நவம்பர் இறுதியில் முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து அம்மாநிலத்தில் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலை 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் தேர்தலை நடத்த உள்ளது. 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அன்றே முடிவுகள் வெளியாகும்.

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் சிவ சேனா போட்டியிடுவது குறித்து உத்தவ் தாக்கரே முடிவு செய்வார்… சஞ்சய் ரவுத்
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே

பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை மேலும் வேகப்படுத்தி விட்டன. இந்த சூழ்நிலையில் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் சிவ சேனாவும் குதிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் பீகார் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்னும் ஒரு சில தினங்களில் முடிவு செய்வார் என அந்த கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் சிவ சேனா போட்டியிடுவது குறித்து உத்தவ் தாக்கரே முடிவு செய்வார்… சஞ்சய் ரவுத்
சஞ்சய் ரவுத்

சஞ்சய் ரவுத் இது தொடர்பாக அவர் கூறுகையில், மகாராஷ்டிரா முதல்வரும், சிவ சேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, பீகார் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக 2-3 தினங்களில் முடிவு எடுப்பார். பீகாரில் தேர்தல் சாதி மற்றம் பிற விஷயங்களில் நடைபெறும். பீகார் தேர்தலில் தொழிலாளர்கள் சட்டங்கள் அல்லது வேளாண் மசோதாக்கள் பிரச்சினையாக இருக்காது என தெரிவித்தார்.