பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நாங்களும் உண்டு…. 50 தொகுதிகளில் போட்டி… சிவ சேனா தகவல்

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நாங்களும் உண்டு…. 50 தொகுதிகளில் போட்டி… சிவ சேனா தகவல்

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் சிவ சேனா 50 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று அந்த கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.

பீகார் சட்டப்பேரவை தேர்தல் வரும் 28ம் தேதி தொடங்கி மொத்தம் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. இந்த சூழ்நிலையில் பா.ஜ.க.வின் முன்னாள் கூட்டணி கட்சியான சிவ சேனா தற்போதுதான் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நாங்களும் உண்டு…. 50 தொகுதிகளில் போட்டி… சிவ சேனா தகவல்
உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே

சிவ சேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ரவுத் இது தொடர்பாக கூறியதாவது: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் சிவ சேனா சுமார் 50 தொகுதிகளில் போட்டியிடலாம். மகாராஷ்டிரா முதல்வரும், சிவ சேனாவின் தலைவருமான உத்தவ் தாக்கரே மற்றும் மாநில அமைச்சர் ஆதித்யா தாக்கரேவும் ஆன்லைன் கூட்டங்களில் உரையாற்றுவார்கள்.

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நாங்களும் உண்டு…. 50 தொகுதிகளில் போட்டி… சிவ சேனா தகவல்
அஸ்வானி குமார்

சி.பி.ஐ.யின் முன்னாள் இயக்குனர் மற்றும் மாநில கவர்னராகவும் இருந்த அஸ்வானி குமார் மிகவும் முக்கியமான மனிதர். யாரும் அவருடைய தற்கொலை குறித்து கேள்வி கேட்கவில்லை. நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை குறித்து குரல் கொடுத்தவர்கள் எங்கே, அந்த மக்கள் தற்போது அமைதியாக இருப்பது ஏன்?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.