யாருக்கும் எதிராக ஆதாரம் இருந்தால் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம்.. அர்னாப் கைது குறித்து சிவ சேனா

யாருக்கும் எதிராக ஆதாரம் இருந்தால் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம்.. அர்னாப் கைது குறித்து சிவ சேனா

யாருக்கும் எதிராக ஆதாரம் இருந்தால் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம் என்று அர்னாப் கைது குறித்து சிவ சேனா தெரிவித்துள்ளது.

ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான விசாரணை மற்றும் தன் மீதான டி.ஆர்.பி. மோசடி தொடர்பான விசாரணை ஆகிய விவகாரங்களில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகராஷ்டிரா அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இந்த சூழ்நிலையில் நேற்று காலை மும்பை போலீசார் அர்னாப் கோஸ்வாமியை அவரது வீட்டுக்கு சென்று அதிரடியாக கைது செய்தனர்.

யாருக்கும் எதிராக ஆதாரம் இருந்தால் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம்.. அர்னாப் கைது குறித்து சிவ சேனா
சஞ்சய் ரவுத்

2018ம் ஆண்டு நடந்த தற்கொலை வழக்கு தொடர்பாக அர்னாப் கோஸ்வாமியை போலீசார் கைது செய்தனர். இவ்வளவுக்கும் அந்த வழக்கு கடந்த ஆண்டு முடித்து வைக்கப்பட்டது. ஆனால் அந்த வழக்கை மீண்டும் தூசி தட்டி அர்னாப்பை போலீசார் கைது செய்துள்ளனர். அர்னாப் கோஸ்வாமி கைது குறித்து சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரவுத் கூறியதாவது:

யாருக்கும் எதிராக ஆதாரம் இருந்தால் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம்.. அர்னாப் கைது குறித்து சிவ சேனா
அர்னாப் கோஸ்வாமி

தாக்கரே அரசாங்கம் அமைக்கப்பட்டதிலிருந்து, பழிவாங்குவதற்காக யாருக்கும் எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. யாருக்கும் எதிராக ஆதாரம் இருந்தால் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். அர்னாப் கோஸ்வாமி கைது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று தெரிவித்தார்.