தீவிரவாதிகள் போல் நடத்தியதும், கலிஸ்தானி என்று அழைத்ததும் விவசாயிகளுக்கு அவமானம்… சஞ்சய் ரவுத்

தீவிரவாதிகள் போல் நடத்தியதும், கலிஸ்தானி என்று அழைத்ததும் விவசாயிகளுக்கு அவமானம்… சஞ்சய் ரவுத்

விவசாயிகளை தீவிரவாதிகள் போல் நடத்தியதும், கலிஸ்தானி என்று அழைத்ததும் அவர்களுக்கு அவமானம் என்று மத்திய அரசை சஞ்சய் ரவுத் விமர்சனம் செய்தார்.

சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரவுத் கூறுகையில், விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுத்து நிறுத்திய விதம், அவர்கள் இந்த நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை என்பது போல் தெரிகிறது. அவர்கள் பயங்கரவாதிகள் போலவே நடத்தப்படுகிறார்கள். அவர்கள் சீக்கியர்கள், பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலிருந்து வந்தவர்கள். அவர்கள் கலிஸ்தானி என்று அழைக்கப்படுகிறார்கள். இது விவசாயிகளுக்கு அவமானம் என்று தெரிவித்தார்.

தீவிரவாதிகள் போல் நடத்தியதும், கலிஸ்தானி என்று அழைத்ததும் விவசாயிகளுக்கு அவமானம்… சஞ்சய் ரவுத்
சஞ்சய் ரவுத்

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் டிவிட்டரில், பா.ஜ.க. விவசாயிகளை தீவிரவாதிகள் என்று கூறி அவர்களை அவமானப்படுத்துவது பா.ஜ.க.வின் மோசமான வடிவம். இது பா.ஜ.க.வின் சதி. பா.ஜ.க. பணக்காரர்களை ஆதரிக்கிறது. சிற வணிகள், கடைக்காரர்கள் மற்றும் சாலை போக்குவரத்து எல்லாவற்றையும் பெரிய நிறுவனங்களுக்கு அடமானம் வைக்க விரும்புகிறது.

தீவிரவாதிகள் போல் நடத்தியதும், கலிஸ்தானி என்று அழைத்ததும் விவசாயிகளுக்கு அவமானம்… சஞ்சய் ரவுத்
அகிலேஷ் யாதவ்

பா.ஜ.க.வின் கூற்றுப்படி, விவசாயிகள் தீவிரவாதிகள், விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை அவர்கள் உட்கொள்ள மாட்டார்கள் என்று அந்த கட்சி சத்தியம் செய்ய வேண்டும் என்று பதிவு செய்து இருந்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜயசிங் மற்றும் பகுஜன்சமாஜ் கட்சி தலைவி மாயாவதி ஆகியோர் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் வலியுறுத்தியுள்ளனர்.