எங்க கோபத்தை புரிந்து கொண்டதற்கு அமித் ஷாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்…. சஞ்சய் ரவுத்

 

எங்க கோபத்தை புரிந்து கொண்டதற்கு அமித் ஷாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்…. சஞ்சய் ரவுத்

மகாராஷ்டிரா கவர்னர் கடித விவகாரத்தில் எங்களது கோபத்தை புரிந்து கொண்டதற்கு அமித் ஷாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் என சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்கள் திறக்கபடாதது தொடர்பாக அம்மாநில கவர்னர் கோஷ்யாரி, முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் உத்தவ் தாக்கரேவின் இந்துத்துவா உணர்வு குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு முதல்வர் உத்தவ் தாக்கரே கடுமையாக பதில் கடிதம் எழுதினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

எங்க கோபத்தை புரிந்து கொண்டதற்கு அமித் ஷாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்…. சஞ்சய் ரவுத்
அமித் ஷா

இந்த சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், வழிபாட்டு தலங்கள் திறக்கப்படாதது தொடர்பாக முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கவர்னர் கோஷ்யாரி கடிதம் எழுதிய போது சிறந்த வார்த்தைகளை தேர்ந்தெடுத்து எழுதியிருக்க வேண்டும் என தெரிவித்தார். அமித் ஷாவின் இந்த கருத்தை சிவ சேனா வரவேற்றுள்ளது. இது தொடர்பாக சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ரவுத் கூறியதாவது:

எங்க கோபத்தை புரிந்து கொண்டதற்கு அமித் ஷாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்…. சஞ்சய் ரவுத்
முதல்வர் உத்தவ் தாக்கரே, கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி

கவர்னரின் கடிதத்தை தொடர்ந்து முதல்வர் அளித்த பதில் தவிர்க்க முடியாத சர்ச்சையை ஏற்படுத்தியது. நாங்கள் அதை தொடங்கவில்லை. ஆனால் மத்திய உள்துறை அமைச்சரின் நிலைப்பாட்டால் நாங்கள் திருப்தி அடைந்தோம். எங்களின் கோபத்துக்கான காரணத்தை புரிந்து கொண்டதற்கு அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அமித் ஷா நாட்டின் உள்துறை அமைச்சர் மற்றும் பொறுப்புடனும், எச்சரிக்கையுடனும் பேசுகிறார். அமித் ஷாவின் அறிக்கையுடன் இந்த பிரச்சினையை சிவ சேனா தீர்த்து வைத்துள்ளது. ராஜ்பவன் மற்றும் கவர்னர் அலுவலகம் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது. ஏனெனில் இது ஒரு அரசியலமைப்பு நிறுவனம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.