அக்டோபர் மாதத்துக்குள் உத்தவ் தாக்கரே அரசை கவிழ்க்க பா.ஜ.க. சதி… சிவ சேனா தலைவர் பகீர் குற்றச்சாட்டு

அக்டோபர் மாதத்துக்குள் உத்தவ் தாக்கரே அரசை கவிழ்க்க பா.ஜ.க. சதி… சிவ சேனா தலைவர் பகீர் குற்றச்சாட்டு

மகாராஷ்டிராவில், சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார். உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சியை பா.ஜ.க. கவிழ்க்க முயற்சி செய்து வருவதாக சிவ சேனா குற்றம் சாட்டுவதும், அதனை பா.ஜ.க. மறுப்பதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

அக்டோபர் மாதத்துக்குள் உத்தவ் தாக்கரே அரசை கவிழ்க்க பா.ஜ.க. சதி… சிவ சேனா தலைவர் பகீர் குற்றச்சாட்டு

இந்த நிலையில், அக்டோபர் மாதத்துக்குள் உத்தவ் தாக்கரே அரசை கவிழ்க்க பா.ஜ.க. சதி செய்வதாக சிவ சேனா தலைவர் சஞ்சய் ரவுத் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சாமனா பத்திரிகையில் சஞ்சய் ரவுத் எழுதியுள்ள வாரந்திர கட்டுரையில் அவர் கூறியிருப்பதாவது: தாக்கரே அரசை கவிழ்க்க பெரும் சதி நடக்கிறது. ஆனால் அது ஒரு போன்று நடக்காது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கட்டுப்பாட்டில் ராஜ் பவன் (கவர்னர் மாளிகை) இருப்பது அதனை உறுதி செய்துள்ளது. மேலும் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாக பட்னாவிஸை முதல்வராக்க அதே துறை செயல்படுகிறது.

அக்டோபர் மாதத்துக்குள் உத்தவ் தாக்கரே அரசை கவிழ்க்க பா.ஜ.க. சதி… சிவ சேனா தலைவர் பகீர் குற்றச்சாட்டு

உத்தவ் தாக்கரே அரசுக்கு அந்த துறை தொந்தரவு கொடுக்கலாம் ஆனால் கவிழ்க்க முடியாது. மகாராஷ்டிரா மேலவையில் 12 உறுப்பினர்களை கவர்னர் நியமனம் செய்ய வேண்டும். ஏனென்றால் அது கவர்னரின் ஒதுக்கீடு. அக்டோபர் மாதத்துக்குள் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சி செய்வதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், அவர்களுக்கு 12 மேலவை உறுப்பினர்கள் இடங்கள் கிடைக்கும். இவ்வாறு அதில் தெரிவித்தார். சஞ்சய் ரவுத் கருத்து தொடர்பாக தேவந்திர பட்னாவிஸிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, 12 மேலவை உறுப்பினர்கள் நியமனம் குறித்து சிந்திப்பதற்கு பதிலாக கொரோனா நோயாளிகள் குறித்து அரசு சிந்திக்குமாறு பதில் அளித்தார்