மோடி தலையிட்டால் விவசாயிகளின் போராட்டம் 5 நிமிடத்தில் முடிவுக்கு வந்து விடும்… யோசனை கூறும் சிவ சேனா

மோடி தலையிட்டால் விவசாயிகளின் போராட்டம் 5 நிமிடத்தில் முடிவுக்கு வந்து விடும்… யோசனை கூறும் சிவ சேனா

மோடி தலையிட்டால் விவசாயிகளின் போராட்டம் 5 நிமிடத்தில் முடிவுக்கு வந்து விடும் என்று சிவ சேனா யோசனை தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கடந்த சில வாரங்களாக டெல்லியின் பல எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பல சுற்று பேச்சுவார்த்தை நடந்த பிறகும் தீர்வு எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய தயார் என்று மத்திய அரசு கூறுகிறது ஆனால் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். இதனால் விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது.

மோடி தலையிட்டால் விவசாயிகளின் போராட்டம் 5 நிமிடத்தில் முடிவுக்கு வந்து விடும்… யோசனை கூறும் சிவ சேனா
விவசாயிகள் போராட்டம்

இந்த சூழ்நிலையில், விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு கொண்டு வர சிவ சேனா ஒரு தீர்வு சொல்லியுள்ளது. சிவ சேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ரவுத் இது தொடர்பாக கூறியதாவது: மத்திய அரசு விரும்பினால், விவசாயிகளுடன் ஒன்றரை மணி நேரம் அமர்ந்து பேசினால் இந்த பிரச்சினையை முடித்து விடலாம்.

மோடி தலையிட்டால் விவசாயிகளின் போராட்டம் 5 நிமிடத்தில் முடிவுக்கு வந்து விடும்… யோசனை கூறும் சிவ சேனா
சஞ்சய் ரவுத்

விவசாயிகள் போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியே தலையிட்டால், அது 5 நிமிடங்களில் தீர்க்கப்படும். மோடி ஜி பெரிய தலைவர். எல்லோரும் அவர் பேச்சை கேட்பார்கள். நீங்கள் பேச்சை தொடங்குங்கள், நடக்கும் அதிசயத்தை பாருங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.