அரசாங்கத்துக்கு இதயம் இருந்தால், மோடியோ, அமித் ஷாவோ விவசாயிகளை அணுகி பேச வேண்டும்.. சிவ சேனா

அரசாங்கத்துக்கு இதயம் இருந்தால், மோடியோ, அமித் ஷாவோ விவசாயிகளை அணுகி பேச வேண்டும்.. சிவ சேனா

மத்திய அரசுக்கு இதயம் இருந்தால், மோடியோ அல்லது அமித் ஷாவோ விவசாயிகளை அணுகி பேச வேண்டும் என்று சிவ சேனா வலியுறுத்தியுள்ளது.

சிவ சேனாவின் மாநிலங்களவை உறுப்பினரும், அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சஞ்சய் ரவுத் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: பாரத் பந்தில் எந்த அரசியலும் இல்லை. யாரும் இருக்கக் கூடாது. மூளையை மறந்து விடுங்கள். அரசாங்கத்துக்கு இதயம் இருந்தால் அரசாங்கம் அது பிரதமராக இருந்தாலும் அல்லது உள்துறை அமைச்சராக இருந்தாலும் விவசாயிகளை அணுகி பேச வேண்டும்.

அரசாங்கத்துக்கு இதயம் இருந்தால், மோடியோ, அமித் ஷாவோ விவசாயிகளை அணுகி பேச வேண்டும்.. சிவ சேனா
சஞ்சய் ரவுத்

நாங்கள் ஒரு போதும் வேளாண் சட்டங்களை ஆதரிக்கவில்லை. தெருக்களில் நிற்கும் விவசாயிகளுக்கு எந்த அரசியல் ஆதரவும் இல்லை. மகாராஷ்டிராவில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் (தேவேந்திர பட்னாவிஸ் இதை புரிந்து கொள்ள வேண்டும். விவசாயிகளின் கைகளில் எந்த அரசியல் கொடியும் இல்லை. எனவே எதிர்க்கட்சி தலைவராக பேசுவதற்கு முன்பு அவர் பத்து முறை சிந்திக்க வேண்டும்.

அரசாங்கத்துக்கு இதயம் இருந்தால், மோடியோ, அமித் ஷாவோ விவசாயிகளை அணுகி பேச வேண்டும்.. சிவ சேனா
தேவேந்திர பட்னாவிஸ்

தேவேந்திர பட்னாவிஸ்அரசியல் கருத்துக்களை ஒதுக்கி வைத்துவிட்டு, விவசாயிகள் தற்போது மார்பில் தோட்டாக்களை கூட எதிர்க்கொள்ள ஏன் தயாராக இருக்கிறார்கள்? என்பது குறித்து சிந்தித்தால் விவசாயிகளின் வலியை அவர் புரிந்து கொள்வார். குடியரசு தலைவருக்கு அதிகாரம் இருந்தால் அவர் இந்த பிரச்சினை (விவசாயிகள் கோரிக்கை) தீர்ப்பார். மத்திய அமைச்சரவை அல்லது பிரதமருக்கு குடியரசு தலைவர் உத்தரவிட்டால் இந்த பிரச்சினை தீர்க்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர பட்னாவிஸ், மக்களவையில் வேளாண் சட்டங்களை சிவ சேனா ஆதரித்ததாக தெரிவித்தார்.