டாக்டர்களை அவமதிக்கவில்லை.. உலக சுகாதார அமைப்பை பற்றிதான் பேசினேன்.. பல்டி அடித்த சஞ்சய் ரவுத்

டாக்டர்களை அவமதிக்கவில்லை.. உலக சுகாதார அமைப்பை பற்றிதான் பேசினேன்.. பல்டி அடித்த சஞ்சய் ரவுத்

மருத்துவர்களுக்கு எதுவும் தெரியாது…கம்பவுண்டர்கள் சிறந்தவர்கள்.. நான் எப்போதும் கம்பவுண்டரிடமிருந்துதான் மருந்து எடுத்துக்கொள்வேன், மருத்துவரிடமிருந்து ஒருபோதும் இல்லை. உலக சுகாதார அமைப்பு ஒரு பயனற்ற அமைப்பு. உலக சுகாதார அமைப்பால்தான் கோவிட்-19 தொற்றுநோய் நிகழ்ந்தது என பேட்டி ஒன்றில் சிவ சேனாவின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ரவுத் தெரிவித்து இருந்தார். இது மருத்துவ வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

டாக்டர்களை அவமதிக்கவில்லை.. உலக சுகாதார அமைப்பை பற்றிதான் பேசினேன்.. பல்டி அடித்த சஞ்சய் ரவுத்

இதனையடுத்து மருத்துவர்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பை இழிவுப்படுத்தி சஞ்சய் ரவுத் கூறிய கருத்து குறித்து மாநிலங்களவை தலைவர் எம். வெங்கையா நாயுடுக்கு மகாராஷ்டிராவில் உள்ள இந்திய மருத்துவர்கள் சங்கம் கடிதம் எழுதியது. இதனையடுத்து நான் மருத்துவர்களை அவமதிக்கவில்லை உலக சுகாதார அமைப்பை இலக்காக வைத்துதான் கருத்து தெரிவித்தேன் என சஞ்சய் ரவுத் விளக்கம் கொடுத்துள்ளார்.

டாக்டர்களை அவமதிக்கவில்லை.. உலக சுகாதார அமைப்பை பற்றிதான் பேசினேன்.. பல்டி அடித்த சஞ்சய் ரவுத்

இது தொடர்பாக சஞ்சய் ரவுத் கூறுகையில், சிலர் இது குறித்து அரசியல் விளையாட முயற்சிக்கிறார்கள். நான் யாரையும் அவமதிக்கவில்லை. குறிப்பாக நான் மருத்துவர்களை அவமதிக்க முடியாது. இந்த கோவிட் கட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், வார்டு பையன்கள் நிறைய பங்களிப்பு செய்துள்ளனர். நான் உலக சுகாதார அமைப்பை பற்றி பேசினேன். இன்னும் பலரும் இதை சொன்னார்கள். உலக சுகாதார அமைப்பு தனது பணியை சரியாக செய்திருந்தால், கோவிட்-19 தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவியிருக்காது என தெரிவித்தார்.