காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால்.. எங்க கட்சிகள் 2 இணைந்து போட்டியிடும்.. சஞ்சய் ரவுத்

 

காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால்.. எங்க கட்சிகள் 2 இணைந்து போட்டியிடும்.. சஞ்சய் ரவுத்

மும்பை மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால், சிவ சேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் இணைந்து போட்டியிடும் என்று சஞ்சய் ரவுத் மறைமுகமாக தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அண்மையில், மகாராஷ்டிரவில் எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் மகா விகாஸ் அகாதி கூட்டணி கட்சிகள் இணைந்த போட்டியிடும் என்று தெரிவித்து இருந்தார். ஆனால், மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால்.. எங்க கட்சிகள் 2 இணைந்து போட்டியிடும்.. சஞ்சய் ரவுத்
சரத் பவார்

நானா படோலின் இந்த கருத்து ஆளும் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மும்பை மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்தும், சிவ சேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்தும் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அம்மாநில தலைவர் நானா படோல் கூறியது குறித்து சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் கூறியதாவது: மகா விகாஸ் அகாதியின் நண்பர், மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் தேர்தலில் தனியாக போட்டியிடுவதாக தெரிவித்தார். அவர்கள் (காங்கிரஸ்) அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள்.

காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால்.. எங்க கட்சிகள் 2 இணைந்து போட்டியிடும்.. சஞ்சய் ரவுத்
நானா படோல்

ஆனால் தேர்தலில் தனித்து போட்டியிடுவார்கள். நீங்கள் தேர்தலில் போட்டியிடலாம். மீதமுள்ள இரு கட்சிகளும் (சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ்) எதிர்காலத்தில் இணைந்து என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்திக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதாவது நீங்க (காங்கிரஸ்) தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக இருந்தால் போட்டியிடுங்க, நாங்க (சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ்) இணைந்து போட்டியிடுவோம் என்று மறைமுகமாக சஞ்சய் ரவுத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.