நாங்க வெறுக்கும் ஒரே வார்த்தை கராச்சி.. அதனால கடை பெயரை மாத்து… ஸ்வீட் கடைக்காரருக்கு உத்தரவிட்ட சிவ சேனா

 

நாங்க வெறுக்கும் ஒரே வார்த்தை கராச்சி.. அதனால கடை பெயரை மாத்து… ஸ்வீட் கடைக்காரருக்கு உத்தரவிட்ட சிவ சேனா

மும்பையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் கராச்சி என்ற ஸ்வீட் கடையின் பெயரை மாற்றக்கோரி அதன் உரிமையாளருக்கு சிவ சேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் உத்தரவிடும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது.

மும்பையின் பந்த்ராவில் கடந்த 60 ஆண்டுகளாக கராச்சி என்ற ஸ்வீட் கடை செயல்பட்டு வருகிறது. கராச்சி என்ற பெயரை மாற்றக்கோரி அந்த ஸ்வீட் கடை உரிமையாளரிடம் சிவ சேனாவின் பிரபல தலைவர்களில் ஒருவரான நிதின் நந்த்கோங்கர் உத்தரவிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் நிதின் நந்த்கோங்கர், கராச்சி ஸ்வீட் கடை உரிமையாளரிடம், நீங்கள் மும்பையில் வாழ்கிறீர்கள், கராச்சி (கடையின் பெயர்) என பெயர் வைத்து இருக்கிறீர்கள். நீங்கள் பிரிவினைக்கு வந்தீர்கள். நீங்கள் வரலாம், வர்த்தகம் செய்யலாம். ஆனால் கராச்சி என பெயர் வைக்கக்கூடாது.

நாங்க வெறுக்கும் ஒரே வார்த்தை கராச்சி.. அதனால கடை பெயரை மாத்து… ஸ்வீட் கடைக்காரருக்கு உத்தரவிட்ட சிவ சேனா
சஞ்சய் ரவுத்

பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் துறைமுகம் என்பதால் நாங்கள் அந்த பெயரை வெறுக்கிறோம். பெயரை மாற்றுவதற்கு உங்களுக்கு அவகாசம் தருகிறோம். நீங்கள் கடையின் பெயரை எப்படி வேண்டுமானாலும் வைத்துகொள்ளுங்கள். உங்கள் மூதாயதையரின் பெயரை கடைக்கு வையுங்கள். ஆனால் கராச்சி பெயரை மட்டும் வைக்கக்கூடாது. பெயரை மராத்தியில் எழுதுங்கள் பெயர் பலகை மற்றும் கடையின் பதிவு சான்றிதழ்களை மாற்றுங்கள் என்று பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நாங்க வெறுக்கும் ஒரே வார்த்தை கராச்சி.. அதனால கடை பெயரை மாத்து… ஸ்வீட் கடைக்காரருக்கு உத்தரவிட்ட சிவ சேனா
கராச்சி ஸ்வீட் கடை

இதனையடுத்து கராச்சி ஸ்வீட் கடை விவகாரம் குறித்து சிவ சேனாவின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரவுத் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக சஞ்சய் ரவுத் டிவிட்டரில், மும்பையில் கடந்த 60 ஆண்டுகளாக கராச்சி பேக்கரி மற்றும் கராச்சி ஸ்வீட்ஸ் உள்ளது. அவர்களுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்போது அதன் பெயரை மாற்ற சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர்களின் பெயரை மாற்ற சொல்வது சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்லை என்று பதிவு செய்து இருந்தார்.