எரிபொருள் விலை உயர்வு.. கேள்வி கேட்டால் நாங்கள் துரோகிகளா?.. மோடி அரசை சாடிய சிவ சேனா

 

எரிபொருள் விலை உயர்வு.. கேள்வி கேட்டால் நாங்கள் துரோகிகளா?.. மோடி அரசை சாடிய சிவ சேனா

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை குறிப்பிட்டு பணம் எங்கே போகிறது?, நாங்கள் கேள்வி கேட்டால் துரோகிகளா மாறுவோமா? என்று மத்திய அரசை சிவ சேனா தாக்கியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 10 தினங்களாக உயர்ந்து வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சதத்தை (ரூ.100) தாண்டி விட்டது. இந்நிலையில் எரிபொருள் விலை உயர்வால் கிடைத்த பணம் எங்கே போகிறது என்று மத்திய அரசிடம் சிவ சேனா கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக சிவ சேனாவின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சஞ்சய் ரவுத் கூறியதாவது:

எரிபொருள் விலை உயர்வு.. கேள்வி கேட்டால் நாங்கள் துரோகிகளா?.. மோடி அரசை சாடிய சிவ சேனா
டீசல், பெட்ரோல் விலை உயர்வு

பணம் எங்கே போகிறது? அது மேற்கு வங்கத்துக்கு போகிறதா? அப்படியானால் அது தவறு. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு தற்போதைய மத்திய அரசு பொறுப்பல்ல ஆனால் முந்தைய அரசுதான் பொறுப்பு என்ற செய்தியை படித்தேன். 7 ஆண்டுகளாக முழு பெரும்பான்மையுடன் நீங்கள் மத்தியில் இருக்கிறீர்கள். ஆனால் பணவீக்கம், ஊழல், தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் அல்லது இந்திய பிராந்தியத்துக்குள் சீனா நுழைந்தது குறித்து இந்த அரசாங்கத்தின் பதில் எப்போதும் ஒரே மாதிரி இருக்கும்.

எரிபொருள் விலை உயர்வு.. கேள்வி கேட்டால் நாங்கள் துரோகிகளா?.. மோடி அரசை சாடிய சிவ சேனா
சஞ்சய் ரவுத்

பெட்ரோல் மற்றும் டீசலின் சர்வதேச விலை குறைவாக இருப்பதை மக்களுக்கு அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். நாங்கள் கேள்வி கேட்டால், நாங்கள் துரோகிகளா மாறுவோமா?. இவ்வாறு அவர் தெரிவித்தார். பா.ஜ.க.வும், சிவ சேனாவும் நீண்ட காலமாக கூட்டணி கட்சிகளாக இருந்து வந்தன. கடந்த மகாராஷ்டிரா தேர்தலுக்கு பிறகு இரண்டு கட்சிகளும் பிரிந்து எலியும் பூனையுமாக மாறி விட்டன. கூட்டணியிலிருந்து பிரிந்த பிறகு பா.ஜ.க. அரசை சிவ சேனா கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.