நடிகைகளை சந்திக்க நேரம் ஒதுக்கும் பிரதமருக்கு விவசாயிகளை சந்திக்க நேரமில்லை: சஞ்சய் தத்

 

நடிகைகளை சந்திக்க நேரம் ஒதுக்கும் பிரதமருக்கு விவசாயிகளை சந்திக்க நேரமில்லை: சஞ்சய் தத்

நடிகைகளை சந்திக்க நேரம் ஒதுக்கும் பிரதமருக்கு விவசாயிகளையும் மக்களையும் சந்திக்க நேரமில்லை என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத், “பீகார் சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். கன்னியாகுமரி தேர்தலில் வசந்தகுமாரின் பணிகளால் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். நரேந்திர மோடியும் அமித்ஷாவும் ஆட்டுவிப்பதால் தமிழகத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் ஆடுகின்றனர். சமானியர்கள் பற்றியும் அவர்கள் படும் சிரமங்கள் பற்றியும் பேச பாஜக தயாராக இல்லை. அவர்களுக்கு பொதுமக்களை பற்றி கவலை இல்லை. ஆதானி அம்பானி பற்றி தான் கவலை.

நடிகைகளை சந்திக்க நேரம் ஒதுக்கும் பிரதமருக்கு விவசாயிகளை சந்திக்க நேரமில்லை: சஞ்சய் தத்

புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டத்தால் வெங்காயம் மட்டுமில்ல மற்ற காய்கறிகளின் விலை உயர வாய்ப்பு உள்ளது. பொருளாதார வீழ்ச்சியை பற்றி யாரும் பேசுவது இல்லை. உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. எட்டாவது அதிசயமாக இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்ந்து வருகிறது.

நடிகைகளை சந்திக்க நேரம் ஒதுக்கும் பிரதமருக்கு விவசாயிகளையும் மக்களையும் சந்திக்க நேரமில்லை. என்ன அழுத்தத்தின் காரணமாக நடிகை குஷ்பு பாரதிய ஜனதாவுக்கு சென்றார் என்பது எங்களுக்குத் தெரியாது. அதை பற்றி எங்களுக்கு கவலையும் இல்லை. தமிழக ஆளுநர் அலுவலகம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை இடமாக செயல்பட்டு வருகிறது. தன்னை விவசாயி என முன்னிலைப்படுத்தும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை ஆதரித்தது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.