Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் சானிடைஸரா... சோப்பா? - கைகளைச் சுத்தம் செய்ய எது பெஸ்ட்?

சானிடைஸரா… சோப்பா? – கைகளைச் சுத்தம் செய்ய எது பெஸ்ட்?

கொரோனா கடந்த ஏழு மாதங்களாக இந்தியாவைப் படாதபாடு படுத்தி வருகிறது. லாக்டெளன் அறிவித்தால் நோய்த் தொற்ற் பரவல் கட்டுப்படுத்தப்படும் என அரசு நினைத்தது.

ஆனால், லாக்டெளன் காலத்திலும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் இருந்தது. இன்றைய தேதியில் கடந்த இரு வாரங்களாக உலகளவில் புதிய நோயாளிகள் அதிகரிப்பது இந்தியாவில்தான்.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 68,74,596 பேரும், இந்தியாவில் 52,14,677 பேரும், பிரேசில் நாட்டில்  44,57,443 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அமெரிக்காவில் 46,295 பேரும், பிரேசிலில் 35,757 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 96,793 பேராக அதிகரித்துள்ளனர். நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் அமெரிக்கா, பிரேசில் நாடுகளை விடவும் இந்தியாவில் அதிகம்.

தமிழகத்தில் புதிய பாதிப்பு 5,783: 88 பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ்

தொடர்ந்து லாக்டெளன் காலத்தை நீட்டிக்க முடியாது என்பதால் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு விட்டன. அதனால், நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோமோ அந்தளவுக்குத்தான் கொரோனா நோய்த் தொற்று நம்மைத் தீண்டாதிருக்கும்.

கொரோனா நோய்த் தொற்று வராதிருக்க சொல்லும் தடுப்பு வழிகளில் அவ்வப்போது கைகளைச் சுத்தப்படுத்திக்கொள்வது. அதற்கு இரண்டு வழிகள் சொல்லப்படுகின்றன. ஒன்று சானிடைஸர் மூலம் கைகளைச் சுத்தப்படுத்துவது. இரண்டு, சோப்பு போட்டு சுத்தப்படுத்துவது. இரண்டில் எது பெஸ்ட் என்ற சந்தேகம் பலருக்கு எழுவது இயல்பு. அது குறித்து பார்ப்போம்.

சானிடைஸரை நம் கைகளில் தடவுகிறோம். எவ்வளவு நேரம் தடவுகிறோம் என்றால், 10 நொடிகள்கூட இல்லை. ஆனால், சானிடைஸர் நம் கையில் முழுமையாகப் பரவ, அனைத்து இடங்களில் பட குறைந்தது 30 நொடிகள் தேவை என்கிறார்கள்.  அவரசத்துக்கு கிடைத்தது என மேலோட்டமாகத் தடவுவதால் எந்தப் பயனும் இல்லை.

அடுத்து, சானிடைஸர் 2 நிமிடங்கள்தான் வேலை செய்யும் என்றும், ஒரு மணியிலிருந்து ஒன்றரை மணி நேரம் மட்டுமே பாதுகாக்கும் என்றும் சொல்லப்படுகிறது. கையில்தான் சானிடைஸர் தடவி விட்டோமே என்று அலட்சியமாக இருக்க முடியாது.

சானிடைஸரை விட கைகளைச் சுத்தப்படுத்த சோப்பைப் பயன்படுத்துவது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கைகளை தண்ணீரால் முதலில் கழுவி விட்டு, சோப்பைத் தாராளமாகக் கைகளில் தடவிக்கொள்ளவும். இரு உள்ளங்கைகளையும் தேய்க்கவும். பிறகு இருகைகளின் மேற்புறம், விரல் இடுக்குகள், விரல் நுனிகள், நக இடுக்குகள் என நிதானமாக அனைத்தையும் சுத்தப்படுத்த வேண்டும். இப்படி முறையாகத் தேய்த்தாலே அரை நிமிடத்திற்கு மேல் நேரமாகி விடும். ஆயினும் சோப் போட்டு கைகளைக் கழுவும் போது குறைந்தது 20 நொடிகள் தேய்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் வழிகாட்டுகிறார்ள். மீண்டும் கைகளை தண்ணீர் விட்டு சோப் போகும் வரை நன்கு கழுவி விடவும்.

அதற்காக எப்போதுமே சோப்பைப் பயன்படுத்த முடியுமா என்று கேட்பது நியாயமான கேள்விதான். ஏனெனில், நாம் வெளியில் செல்லும்போது சோப், தண்ணீர் எடுத்துச் செல்ல முடியாது. நாம் செல்லும் இடங்களில் அவை இருக்கும் என எதிர்பார்க்கவும் முடியாது.

அதனால், அப்போதெல்லாம் சானிடைஸரைப் பயன்படுத்தலாம். ஆனால், 30 நொடிகள் கைகளின் அனைத்துப் பகுதிகளிலும் படும்படி தேய்க்கவும். இரண்டில் எது பயன்படுத்தினாலும், கிருமிகள் அகலும் விதமாக நன்கு தேய்க்க வேண்டியது அவசியம்.

புதிய பொருளைத் தொட்டாலும், வெளியில் சென்று வந்தாலும் கைகளைச் சுத்தப்படுத்துவது மிகவும் முதன்மையான வேலையாக வைத்துக்கொள்ளவும். இன்றைய சூழலில் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வதே நோயிலிருந்து தற்காத்துக்கொள்வதே முதல் பணியாகும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

தமிழகத்தில் 18 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

18 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருவள்ளுவர்...

மனுதர்ம நூலை தடை செய்ய கோரி விசிக ஆர்ப்பாட்டம்

பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம நூலை தடை செய்யகோரி, திண்டுக்கல்லில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வருமான வரி தாக்கல் செய்ய – டிசம்பர். 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 2018-19ம் நிதியாண்டுக்கான வருமான...

ராஜராஜனின் 1035ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா: பேரரசனுக்கு நன்றிக் கடன் செலுத்தப்படுமா?

தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் இராஜராஜன் பிறந்த நாள் விழாவான சதய விழா நாளை மறுதினம் 26.10.2020 திங்கட் கிழமை அன்று நடைபெறுகிறது. கொரோனா காலம் என்பதால் ஒருநாள் நிகழ்வாக விழாவை...
Do NOT follow this link or you will be banned from the site!