ஜெகன்னாத் ரத யாத்திரை : கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் பங்கேற்பு!

 

ஜெகன்னாத் ரத யாத்திரை : கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் பங்கேற்பு!

ஒடிசா மாநிலத்தில் புகழ்பெற்ற புரி ஜெகன்நாதர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ரத யாத்திரை விசேஷமாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக ரத யாத்திரை நடைபெறுமா என்ற சந்தேகம் நீடித்த நிலையில் உச்ச நீதி மன்றம் கடும் கட்டுப்பாட்டு உத்தரவுகளுக்கு மத்தியில் ரத யாத்திரை இன்று துவங்கியுள்ளது.

ஜெகன்னாத் ரத யாத்திரை : கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் பங்கேற்பு!

16 சக்கரங்கள், 14 சக்கரங்கள், 12 சக்கரங்கள் முறையே அமைந்துள்ள தேரில் உற்சவ மூர்த்தியும், பாலபத்திரரும், சுபத்ராவும் எழுந்தருளியுள்ளனர். இந்த தேரானது குண்டிச்சா கோயிலை சென்றடைந்ததும் ஜெகன்நாதர் ஓய்வெடுப்பார். திருவிழாவின் 4 நாளில் தனது கணவரை காண லட்சுமி தேவி குண்டிச்சா கோயிலுக்கு வருகை தர உள்ளார். பின்னர் மீண்டும் தேர்கள் ஜெகன்நாதர் கோயிலை வந்தடையும்.

இந்த விழாவில் 500 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார், பக்தர்கள் ஏன் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டத்தை வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சியில் நேரலையில் காண மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.