கொரோனாவால் இறந்தவர் உடலை ஜே.சி.பி இயந்திரம் மூலம் தள்ளிச் சென்ற நகராட்சி ஊழியர்கள்! – ஆந்திராவில் அதிர்ச்சி

 

கொரோனாவால் இறந்தவர் உடலை ஜே.சி.பி இயந்திரம் மூலம் தள்ளிச் சென்ற நகராட்சி ஊழியர்கள்! – ஆந்திராவில் அதிர்ச்சி

ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை  மூலம் சாலையில் தள்ளிக்கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஶ்ரீகாகுளம் மாவட்டத்தில் பாலசா நகராட்சி உள்ளது. இங்கு கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை அதிகாரிகள் அப்புறப்படுத்தும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. 72 வயதான முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் முழு கவசம் அணிந்த ஊழியர்கள் அந்த முதியவரின் உடலை சாலையில் தள்ளிக்கொண்டு சென்றனர். இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இது ஆந்திராவில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கொரோனாவால் இறந்தவர் உடலை ஜே.சி.பி இயந்திரம் மூலம் தள்ளிச் சென்ற நகராட்சி ஊழியர்கள்! – ஆந்திராவில் அதிர்ச்சி

“பாலாசா என்பது மிகச்சிறிய நகரம். இங்கு கொரோனா காரணமாக உயிரிழந்தவர் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லை. ஶ்ரீகாகுளத்தில் இருந்து ஆம்புலன்ஸ் கொண்டு வர வேண்டும் என்றால் நேரம் ஆகும். கொரோனாவால் உயிரிழந்துள்ளார் என்பதால் அருகில் வசிப்பவர்கள் உடலை அங்க நீண்ட நேரம் வைத்திருக்க அனுமதிக்கவில்லை. அதனால் வேறு வழியின்றி ஜே.சி.பி வாகனத்தின் உதவியுடன் உடல் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது” என்று நகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனாலும் மக்களின் கோபம் குறையவில்லை. அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்துவந்தனர். இதைத் தொடர்ந்து பாலசா நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து ஶ்ரீகாகுளம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.