“தங்க காக்கை வாகனத்தில் சனி பகவான்” தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசித்தார்!

“தங்க காக்கை வாகனத்தில் சனி பகவான்” தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசித்தார்!

காரைக்கால் அருகே பிரசித்தி பெற்ற திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ள சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சனி பெயர்ச்சி நிகழ்வு வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது.

“தங்க காக்கை வாகனத்தில் சனி பகவான்” தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசித்தார்!

இந்நிலையில் இன்று அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ந்தார் . அப்போது அவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீப ஆராதனை நடந்தது. உற்சவ கோலத்தில் காட்சியளித்த சனிபகவான் தங்க காக்கை வாகனத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

“தங்க காக்கை வாகனத்தில் சனி பகவான்” தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசித்தார்!

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் கமலக்கண்ணன், கந்தசாமி , தருமபுரம் ஆதீனம் 26 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த சுவாமிகள், மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

“தங்க காக்கை வாகனத்தில் சனி பகவான்” தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசித்தார்!

சனிப்பெயர்ச்சி நிகழ்வையொட்டி திருநள்ளாறு கோவிலுக்குள் ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

“தங்க காக்கை வாகனத்தில் சனி பகவான்” தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசித்தார்!

கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதால் நள, பிரம்ம தீர்த்தங்களில் புனித நீராட பக்தர்களுக்கு தடை தடைவிதிக்கப்பட்டுள்ளது.