• August
    24
    Saturday

Main Area

Main



நாரதர் வேலை பார்த்த வனிதா: முதல் முறையாக தட்டிகேட்ட சாண்டி!

வனிதா
வனிதா
Loading...

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் தொடங்கி 51 நாட்களை எட்டியுள்ளது.  16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதிலிருந்து இதுவரை 7பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் முகின் ராவ், அபிராமி, கவின், லாஸ்லியா மற்றும் மதுமிதா ஆகியோர் உள்ளனர். 

இந்த வார luxury பட்ஜெட் டாஸ்க்காக விருந்தாளியாக மீண்டும் வனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். வந்த உடனே அடுத்தவர்களைக் குறை சொல்வது, அதிகாரமாகக் கேள்வி கேட்பது என்று பழையபடி தனது அராஜகத்தை ஆரம்பித்துவிட்டார். 

இந்த நிலையில் முதல் ஆளாக முகனை, வனிதா டார்கெர்ட் செய்துள்ளார். முகனின் உண்மையான முகத்தை மறைத்து அவரை தப்பாக அபியிடம் சொல்லி சண்டை முட்டியுள்ளார் நம்ப நாரதர் வனிதா. இதனால் ஆத்திரமடைந்த முகன் தன் மேல் தவறு இல்லை என்று நிரூபிக்க முயன்று தோல்வி அடைந்து அழ ஆரம்பித்துள்ளார். 

அதற்கான புரோமோ வெளியாகியுள்ளது. அதில் முகன்,  'நான் எது சொன்னாலும் tack பன்றேன் சொல்றா அபி. அப்போ நான் எதுமே சொல்ல கூடாத?' என்று கதறி அழுகிறார். உடனே அவரை சமாதானம் செய்யும் வகையில் தர்ஷன், 'அவ உன்னோட weekness பயன்படுத்திட்டு இருக்க' என்று சமாதானம் செய்கிறார். 

பின்னர் இந்த கலவத்திற்கு உண்மையான காரணம் வனிதா தான் என்பதைக் கண்டு பிடித்த சாண்டி, 'நேத்து நீங்க என்ன சொன்னிங்க. எல்லாத்தையும் நொண்டி நொண்டி விட்டுகிட்டு' என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறார். 

2018 TopTamilNews. All rights reserved.