அரசுக்கு சொந்தமான இடத்தில் மரங்கள் வெட்டி கடத்தல்- அதிகாரிகள் உடந்தையா?

 

அரசுக்கு சொந்தமான இடத்தில் மரங்கள் வெட்டி கடத்தல்- அதிகாரிகள் உடந்தையா?

திருப்பத்தூர்- ஆம்பூர்
ஆம்பூர் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில், விலை உயர்ந்த அரிய மரங்களை மர்ம நபர்கள் வெட்டிக் கடத்துவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூரில், அரசுக்கு சொந்தமான டால்கோ தோல் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்காக, வளாகத்திலேயே குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்த நிலையில், இந்த தொழிற்சாலை நஷ்டத்தில் இயங்கியதால், பத்து ஆண்டுகளுக்கு முன் தொழிற்சாலை மூடப்பட்டது. இதனால் தொழிற்சாலை வளாகம் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியதால், சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது.


இந்த வளாகத்தில் உள்ள பூங்காவில், ஏராளமான அரிய வகை மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த நிலையில், இங்குள்ள மரங்களை சிலர் இரவோடு இரவாக லாரிகளில் வெட்டிக் கடத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்
விலை உயர்ந்த தேக்கு,வேம்பு, தைல மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாகவும், அதற்கு சில அதிகாரிகளே உடந்தையாக உள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ள சமூக ஆர்வலர்கள், மரங்களை வெட்ட முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பி உள்ளனர். இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவகள் வெளியாகியுள்ளன.
-பழனி