லாரி மோதி கொல்ல முயற்சி? நூலிழையில் உயிர் தப்பிய ஓசூர் கோட்டாட்சியர்!

 

லாரி மோதி கொல்ல முயற்சி? நூலிழையில் உயிர் தப்பிய ஓசூர் கோட்டாட்சியர்!

சமீப காலமாக தமிழகத்தில் மணல் கடத்தல் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுபடுத்த தமிழக அரசு அதிரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் நீதிமன்ற வரையிலும் கூடச் சென்றது. இருப்பினும், இதற்கான வாழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படவில்லை. இந்த நிலையில், மணல் கடத்தலை தடுக்க முயன்ற ஓசூர் கோட்டாட்சியரை லாரி மோதி கொலை செய்ய முயற்சி நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாரி மோதி கொல்ல முயற்சி? நூலிழையில் உயிர் தப்பிய ஓசூர் கோட்டாட்சியர்!

ஓசூரில் இருந்து கர்நாடகாவிற்கு எம்.சாண்ட் கடத்திச்சென்ற லாரியை துரத்திக் கொண்டு , ஓசூர் கோட்டாட்சியர் குணசேகரும், வட்டாட்சியர் செந்தில்குமாரும் காரில் சென்றுள்ளனர். இவர்கள் அந்த லாரியை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த மற்றொரு மணல் லாரி காரின் மீது மோதியிருக்கிறது. இந்த விபத்தில், கோட்டாட்சியரும் வட்டாட்சியரும் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், கொலை செய்யும் திட்டத்துடன் கார் மீது லாரி மோதியதா? அல்லது விபத்தா? என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.