108 மெகா பிக்சல் கேமரா இடம்பெறவுள்ள சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா

 

108 மெகா பிக்சல் கேமரா இடம்பெறவுள்ள சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா

சாம்சங் கேலக்சி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 108 மெகா பிக்சல் கேமரா இடம்பெறுவது ஏறக்குறைய உறுதி ஆகியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் குறித்து நிறைய விஷயங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 5-ஆம் தேதி அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிரபல டிப்ஸ்டர் ரோலண்ட் குவாண்ட்ட் இந்த ஸ்மார்ட்போனில் 108 மெகாபிக்சல் மெயின் கேமரா இடம்பெறுவது உறுதி என பகிர்ந்துள்ளார்.

108 மெகா பிக்சல் கேமரா இடம்பெறவுள்ள சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா

கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 108 மெகாபிக்சல் கேமரா இடம்பெறுவது பற்றி ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது கசிந்துள்ள தகவல் மிகவும் நம்பத் தகுந்ததாக பார்க்கப்படுகிறது.  கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.