• March
    19
    Tuesday

Main Area

Main



சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ7 (2018) மற்றும் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன்கள் அதிரடி விலை குறைப்பு

samsung
samsung
Loading...

மும்பை: இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ7 (2018) மற்றும் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ7 (2018) மற்றும் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 4 ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி ஏ7 (2018) ஸ்மார்ட்போன் இதற்கு முன்பு ரூ.23,990-க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.18,990 -க்கு விற்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி வெர்ஷன் ரூ.28,990-க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.22,990 விலையில் விற்கப்படுகிறது.

அதேபோல கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன் 6 ஜிபி வெர்ஷன் விலை ரூ.36,990-இல் இருந்து தற்போது ரூ.33,990 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி வெர்ஷன் ரூ.39,990-இல் இருந்து தற்போது ரூ.36,990 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அமேசான் வலைதளத்தில் புதிய விலையுடனே இந்த ஸ்மார்ட்போன்கள் தற்போது விற்கப்பட்டு வருகின்றன.

2018 TopTamilNews. All rights reserved.