அறிமுகமானது சாம்சங் ஏர்டிரெஸ்சர் – விலை எவ்வளவு தெரியுமா?

 

அறிமுகமானது சாம்சங் ஏர்டிரெஸ்சர் – விலை எவ்வளவு தெரியுமா?

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த, சாம்சங் ஏர்டிரஸ்சர் கருவியை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இந்தியாவில் அல்ல, இங்கிலாந்தில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அறிமுகமானது சாம்சங் ஏர்டிரெஸ்சர் – விலை எவ்வளவு தெரியுமா?

வாஷிங் மெஷினை விடவும் நவீன முறையில், துணிகளை வெளுக்கும் தொழில்நுட்பத்தினை இதில் பயன்படுத்தி உள்ளது. அடித்து வெளுத்து, துணிகளை கிழிக்காமல், வாஷிங்மெஷின் போல துணிகளை சுருட்டாமல், ஹேங்கரில் மாட்டி இருக்கும் நிலையிலேயே துணிகளை வெளுத்து விடும். விலை உயர்ந்த ஆடைகள், கோட் போன்றவற்றை, டிடர்ஜெண்ட் தூள் கொண்டு வெளுப்பதன் மூலம், அதன் பளபளப்பும், துணியின் மிருது தன்மையும் குறைந்துவிடுகிறது. ஆனால் சாம்சங் ஹேர்டிரஸ்சர் தொழில்நுட்பம் துணிகளின் மிருது தன்மையை அப்படியே தக்க வைக்கும்.

அறிமுகமானது சாம்சங் ஏர்டிரெஸ்சர் – விலை எவ்வளவு தெரியுமா?


இதன் நவீன தொழில்நுட்பம், முதலில் அழுக்கான ஆடைகளின் மீது அழுத்தமாக காற்றினை வீசுகிறது. அதன் மூலம் ஆடைகளில் படிந்த அழுக்கு, வாடைகள் அப்புறப்படுத்தப்படும். அதன்பின்னர், நீராவி புகை செலுத்தி, ஆடைகளில் படிந்துள்ள பாக்டீரியா, வைரஸ் மற்றும் கடின அழுக்குகளை நீக்குகிறது. அதற்கடுத்து குறைந்த வெப்ப நிலையில் ஆடைகள் உலர்த்துகிறது. நான்காவது கட்டமாக ஆடைகளை புத்தம்புது உணர்வை தரும் வகையில் மிருதுவாக்குகிறது.
பார்ப்பதற்கு சிறிய பீரோ போல இருக்கும் இந்த கருவி உடையறையை நவீனமாக்கும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. இந்தியாவில் தற்போது விற்பனைக்கு வராது என்பது கவனிக்க வேண்டிய விஷயம். இந்தியாவில் இதன் விலை எவ்வளவு இருக்கும் என்றால், தோராயமாக ஒரு லட்சத்து 98 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என கூறப்படுகிறது.