தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதிரி வாக்குப்பதிவு… ஆட்சியர் தொடங்கி வைத்தார்…

 

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதிரி வாக்குப்பதிவு… ஆட்சியர் தொடங்கி வைத்தார்…

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக, அதிகாரிகளுடன் ஆட்சியர் செந்தில்ராஜ் ஆலோசனை நடத்தினார்.

சட்டமன்ற தேர்தலில், தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க செய்வது தொடர்பாக, அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான செந்தில்ராஜ் இன்று ஆலோசனை நடத்தினார்.

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதிரி வாக்குப்பதிவு… ஆட்சியர் தொடங்கி வைத்தார்…

பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்ளும் விதமாக மாதிரி வாக்குப் பதிவை, ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். இதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் முறை குறித்தும், தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை விவிபேட் கருவி மூலம் அறிந்து கொள்ளும் விதமாகவும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் (பயிற்சி) சதீஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம் மற்றும் ஏராளமான மாற்றுதிறனாளிகள் கலந்துகொண்டனர்.