டெல்லி அணிவகுப்பில் ஒலித்த ‘சாமியே சரணம் ஐயப்பா’ கோஷம்!

 

டெல்லி அணிவகுப்பில் ஒலித்த ‘சாமியே சரணம் ஐயப்பா’ கோஷம்!

குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் நடைபெற்று வரும் அணிவகுப்பில் சுவாமி ஐயப்பன் கோஷம் ஒலிக்கப்பட்டது.

நம் நாட்டின் 72ஆவது குடியரசு தினவிழாவையொட்டி, தலைநகர் டெல்லி ராஜ்பாத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றி வைத்தார். டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு, பிரதமர் மோடி ராஜ்பாத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டார். தேசியக்கொடி ஏற்றப்பட்டவுடன் முப்படை வீரர்களின் அணிவகுப்பு தொடங்கியது. பின்னர், அதிநவீன ஆயுதங்களுடன் இந்திய ராணுவத்தின் அணிவகுப்பு நடைபெற்றது.

டெல்லி அணிவகுப்பில் ஒலித்த ‘சாமியே சரணம் ஐயப்பா’ கோஷம்!

இதைத் தொடர்ந்து, மாநிலங்களின் அலங்கார வாகன அணிவகுப்பு தொடங்கியது. ஒவ்வொரு மாநிலங்களும் தங்களது பெருமையை பறைசாற்றும் விதமாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்துடன் அணிவகுத்துச் சென்றன. அந்த வகையில் தமிழகம், பல்லவர்களின் பெருமையை பறைசாற்றும் விதமாக மாமல்லபுரம் கட்டிடக் கலையுடன், பரதநாட்டியத்தை ஒருங்கிணைத்து அணிவகுத்துச் சென்றது.

டெல்லி அணிவகுப்பில் ஒலித்த ‘சாமியே சரணம் ஐயப்பா’ கோஷம்!

இந்த நிலையில், டெல்லி அனுவகுப்பின் போது ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்ற கோஷம் ஒலிக்கப்பட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரமோஸ் ஏவுகணை அணிவகுத்து சென்ற போது அந்த கோஷம் ஒலிக்கப்பட்டதாக தெரிகிறது.