திருவனந்தபுரம் நவராத்திரி விழா: குழித்துறையில் இருந்து புறப்பட்டது சாமி சிலைகள்!

திருவனந்தபுரம் நவராத்திரி விழா: குழித்துறையில் இருந்து புறப்பட்டது சாமி சிலைகள்!

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவை முன்னிட்டு, குழித்துறையில் இருந்து சாமி சிலைகள் புறப்பட்டன.

கேரள மாவட்டம், திருவனந்தபுரத்தில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பிரசித்தி பெற்ற சிலைகள் திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, விழா முடிந்ததும் திரும்ப கொண்டு வரப்படும். அந்த வகையில் வரும் 17ம் தேதி நவராத்திரி தொடங்குவதை ஒட்டி, கன்னியாகுமரியில் இருந்து பல சிலைகள் கொண்டு செல்லப்படுகின்றன.

திருவனந்தபுரம் நவராத்திரி விழா: குழித்துறையில் இருந்து புறப்பட்டது சாமி சிலைகள்!

குறைந்த மக்கள் கூட்டத்துடன், சமூக இடைவெளியை பின்பற்றி சாமி சிலைகளை கொண்டு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதன் பேரில், உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் ஊர்வலம் நடைபெறுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் பல்லக்கில் ஊர்வலமாக திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதே போல, வேளிமலை முருகன் பல்லக்கும், சரஸ்வதி அம்மன் உள்ளிட்ட சிலைகள் யானை மீது வைத்து கொண்டு செல்லப்பட்டன.

திருவனந்தபுரம் நவராத்திரி விழா: குழித்துறையில் இருந்து புறப்பட்டது சாமி சிலைகள்!

இந்த நிலையில், குழித்துறையில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி சாமி சிலைகள் புறப்பட்டன. மக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.