திருச்செந்தூர் முருகன் கோயிலில் 2 நாட்களுக்கு சாமி தரிசனம் ரத்து!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 2 நாட்களுக்கு சாமி தரிசனம் ரத்து!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நாளை மற்றும் நாளை மறுநாள் அனுமதி ரத்து செய்யப்படுகிறது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 2 நாட்களுக்கு சாமி தரிசனம் ரத்து!

கொரோனா காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டு கிடந்த கோயில்கள் மீண்டும் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆனாலும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்யவும், போதுமான பாதுக்காப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து தரவும் அரசு அறிவுறுத்தியது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 2 நாட்களுக்கு சாமி தரிசனம் ரத்து!

இந்நிலையில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாம் வீடான பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் ஆலயத்தில் இரண்டு நாட்களுக்கு சாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.உற்சவத்தின் முக்கிய நிகழ்வான சிவப்பு சாத்தி, பச்சை சாத்தி உற்சவம் நடைபெறுவதால் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை 4.30 மணிக்கு சிவப்பு சாத்தி, செப்டம்பர் 13-ஆம் தேதி பகல் 11 மணிக்கு பச்சை சாத்தி நிகழ்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.