பிரசாந்த் கிஷோரும் கைவிட்டு விட்டார்.. மம்தா பானர்ஜியை கிண்டலடித்த பா.ஜ.க.

பிரசாந்த் கிஷோரும் கைவிட்டு விட்டார்.. மம்தா பானர்ஜியை கிண்டலடித்த பா.ஜ.க.

பிரசாந்த் கிஷோரும் தீதியை கைவிட்டு விட்டார் என்று மம்தா பானர்ஜியை பா.ஜ.க. கிண்டல் அடித்துள்ளது.

மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜியின் முதன்மை ஆலோசகராக தேர்தல் யுக்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் உள்ளார். எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனது கட்சியின் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோரை மம்தா பானர்ஜி மலைபோல் நம்பியுள்ளார். இந்த சூழ்நிலையில் பிரசாந்த் கிஷோர் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பிரசாந்த் கிஷோரும் கைவிட்டு விட்டார்.. மம்தா பானர்ஜியை கிண்டலடித்த பா.ஜ.க.
முதல்வர் மம்தா பானர்ஜி

பிரசாந்த் கிஷோர் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டதை குறிப்பிட்டு மம்தா பானர்ஜியை பா.ஜ.க கிண்டல் செய்துள்ளது. பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரசாந்த் கிஷோரும் தீதியை (மம்தா பானர்ஜி) விட்டு விட்டார்.

பிரசாந்த் கிஷோரும் கைவிட்டு விட்டார்.. மம்தா பானர்ஜியை கிண்டலடித்த பா.ஜ.க.
சம்பித் பத்ரா

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, அவரது (மம்தாவின்) மிகப்பெரிய ஆலோசகர் (பிரசாந்த் கிஷோர்) வேறொருவருடன் சேர்ந்துள்ளார். இது நிறையை பேசுகிறது. மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 200 இடங்களை வெல்லும் என்பதற்கான ஒரு உணர்தல் இது. அரசியல் ஆலோசகர் என்று அழைக்கப்படுபவர்களும் இதை உணர்ந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.