ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்புங்க.. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு பா.ஜ.க. வலியுறுத்தல்

 

ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்புங்க.. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு பா.ஜ.க. வலியுறுத்தல்

டெல்லியில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரின் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவேற்றம் செய்த ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பும்படி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு பா.ஜ.க. வேண்டுகோள் விடுத்துள்ளது.

டெல்லியில் கடந்த 1ம் தேதியன்று 9 வயது சிறுமி 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்புங்க.. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு பா.ஜ.க. வலியுறுத்தல்
சம்பிட் பத்ரா

இதனை தொடர்ந்து ராகுல் காந்தி டிவிட்டரில், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ததுடன், பெற்றோரின் கண்ணீர் ஒரே ஒரு விஷயத்தை சொல்கிறது. அவரது மகள், நாட்டின் மகள் நீதிக்கு தகுதியானவர் இந்த நீதியின் பாதையில் நான் அவர்களுடன் இருக்கிறேன் என பதிவு செய்து இருந்தார். ராகுல் காந்தி சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை ஷேர் செய்ததை பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சம்பிட் பத்ரா தனது டிவிட்டர் பக்கத்தில், அவரது (ராகுல் காந்தி) டிவிட் போக்சோ சட்டத்தின் பிரிவு 23 மற்றும் சிறார் அடையாளத்தை வெளிப்படுத்துவதை தடுக்கும் சிறுவர் நீதி பராமரிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 74 ஐ மீறுகிறது. அவர் குழந்தையின் (பாதிக்கப்பட்ட) குடும்ப அடையாளத்தை வெளிப்படுத்தினார்.

ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்புங்க.. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு பா.ஜ.க. வலியுறுத்தல்
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்

மேலும் இந்த விவகாரத்தை தனது அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்துகிறார். தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ராகுல் காந்திக்கு எதிராக போக்சோ சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை மற்றும் நோட்டீஸ் வழங்க வேண்டும். யாரும் விஐபி அல்ல. ராகுல் காந்தி இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று பதிவு செய்து இருந்தார். இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவேற்றம் செய்த புகைப்படத்தை (சிறுமியின் பெற்றோருடன் ராகுல் காந்தி இருக்கும் புகைப்படம்) நீக்குமாறு டிவிட்டர் இந்தியாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.