உ.பி. தேர்தலுக்கு இன்னும் 2 வருஷம் இருக்கு… ஆனால் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிய அகிலேஷ் யாதவ்

உ.பி. தேர்தலுக்கு இன்னும் 2 வருஷம் இருக்கு… ஆனால் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிய அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளநிலையில் இப்போதே அதற்கான பணிகளை ஆரம்பித்து விட்டார் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் அடுத்த சட்டப்பேரவை தேர்தல் 2022ம் ஆண்டில்தான் நடைபெறும். தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் சமாஜ்வாடி கட்சி இப்போதே அதற்கு தயாராகி வருகிறது. 2022ம் ஆண்டில் நடைபெற அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள கட்சி உறுப்பினர்களிடம் இப்போதே விருப்ப மனுவை சமாஜ்வாடி வாங்க தொடங்கி விட்டது.

உ.பி. தேர்தலுக்கு இன்னும் 2 வருஷம் இருக்கு… ஆனால் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிய அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாடி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி இது தொடர்பாக கூறியதாவது: 2022ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக, போட்டியிட விரும்பும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. அக்டோபர் 19ம் தேதி (நேற்று) முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. விருப்ப மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 2021 ஜனவரி 26ம் தேதி.

உ.பி. தேர்தலுக்கு இன்னும் 2 வருஷம் இருக்கு… ஆனால் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிய அகிலேஷ் யாதவ்
தேர்தல்

சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளிலிருந்தும், தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளிலிருந்தும் வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. தொகுதி மற்றும் சாவடி நிலை வரை அமைப்பை வலுப்படுத்த சமாஜ்வாடி கட்சி முக்கியத்துவம் அளிக்கிறது. இனிமேல் மக்கள் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு கட்சியின் தொண்டர்கள் மற்றும் தலைவர்களிடம் கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.