கொரோனா வைரஸ் பரவலை மருத்துவ சிக்கலை காட்டிலும் குற்ற பிரச்சினையாக உருவாக்கிறது… யோகி அரசு மீது அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு….

கொரோனா வைரஸ் பரவலை மருத்துவ சிக்கலை காட்டிலும் குற்ற பிரச்சினையாக உருவாக்கிறது… யோகி அரசு மீது அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு….

கோவிட்-19 தொடர்பான ஆயிரக்கணக்கான எப்.ஐ.ஆர்.க்களை குறிப்பிட்டு, கொரோனா வைரஸ் பரவலை மருத்துவ சிக்கலை காட்டிலும் குற்ற பிரச்சினையாக உருவாக்கிறது என முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசை அகிலேஷ் குற்றச்சாட்டினார்.

உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமலில் உள்ள லாக்டவுனை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கடுமையாக பின்பற்றி வருகிறது. லாக்டவுன் விதிமுறைகள் மீறல்களில் ஈடுபட்டவர்கள், லாக்டவுன் காலத்தில் பொருட்கள் பதுக்கல் மற்றும் கள்ள சந்தை என தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது அம்மாநில போலீசார் ஆயிரக்கணக்கான எப்.ஐ.ஆர்.களை பதிவு செய்துள்ளனர். இதுதவிர, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஏற்பாடு செய்த ஆயிரம் பஸ்கள் விவகாரத்தில் தொடர்புடைய காங்கிரஸ் தலைவர்கள் மீதும் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர்.

கொரோனா வைரஸ் பரவலை மருத்துவ சிக்கலை காட்டிலும் குற்ற பிரச்சினையாக உருவாக்கிறது… யோகி அரசு மீது அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு….

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பாக அம்மாநில போலீசார் ஆயிரக்கணக்கான எப்.ஐ.ஆர்.களை பதிவு செய்து இருப்பதை சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குறை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: கொரோனா வைரஸ் தொடர்பாக உத்தர பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மருத்துவ சிக்கலை விட குற்ற பிரச்சினையாக அரசு உருவாக்கிறது போன்று உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை மருத்துவ சிக்கலை காட்டிலும் குற்ற பிரச்சினையாக உருவாக்கிறது… யோகி அரசு மீது அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு….

தனிமைப்படுத்தல் மையங்களின் மோசமான நிலை மற்றும் பா.ஜ.க. அரசாங்கத்தின் பாரபட்சமான கொள்கை காரணமாக மக்கள் அங்கு செல்வதற்கு பயப்படுகிறார்கள். பா.ஜ.க. மக்கள் தங்களது குறுகிய பார்வையை மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.