3 மாதங்களுக்கு பிறகு மகாராஷ்டிராவில் சலூன்கள் திறப்பு

 

3 மாதங்களுக்கு பிறகு மகாராஷ்டிராவில் சலூன்கள் திறப்பு

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் 3 மாதங்களுக்கு பின்பு சலூன்கள் திறக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவில் 5,000-க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 59 ஆயிரத்தை கடந்துள்ளது. மும்பையில் 1,400 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மும்பையில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 74,252-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவல் தடுக்கும் நோக்கில் மார்ச் மாதம் மகாராஷ்டிர மாநிலத்தில் சலூன்கள் மூடப்பட்டன. இந்நிலையில், தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் 3 மாதங்களுக்கு பின்பு சலூன்கள் திறக்கப்பட்டுள்ளன.

சலூன்களுக்கு வருபவர்களின் விவரங்களை சேகரிப்பதாகவும், அவர்களின் உடல் வெப்பநிலையை கண்காணித்த பிறகே சலூனில் அனுமதிப்பதாகவும், ஹேண்ட் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகே வாடிக்கையாளர்கள் சலூனுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள் என சலூன் உரிமையாளர்கள் கூறினர். மேலும் ஒவ்வொரு வாடிக்கையாளர் சலூன் இருக்கையில் அமரும்போதும் புதிய டவல் பயன்படுத்தப்படுவதாக கூறியுள்ளனர்.