Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் உமிழ் நீர்... சர்க்கரை நோய்க்கு ஓர் இயற்கை நிவாரணி!

உமிழ் நீர்… சர்க்கரை நோய்க்கு ஓர் இயற்கை நிவாரணி!

சர்க்கரை நோய்… உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று சொல்லுமளவுக்கு இந்நோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. நோய் என்று சொல்வதைவிட சர்க்கரை நோய்க்குறைபாட்டை சரிசெய்ய பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. நமது பாரம்பரிய மருத்துவத்தில் பின்பற்றப்பட்டு வரும் மிக எளிமையான வழிமுறைகளை அவ்வப்போது பலரும் சொல்லி வருகின்றனர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும் என்ற நோக்கில் இதுபோன்ற கருத்துகளை நாம் சொல்லி வருகிறோம்.

எச்சில்:
சர்க்கரை நோய் வராமலிருக்க நம் வாயில் சுரக்கும் உமிழ்நீர் ஓர் இயற்கை மருந்தாகச் செயல்படும் என்பதை நம் முன்னோர் அறிந்திருந்தனர். அதனால்தான் உண்ணும் உணவை பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் சாப்பிட்டனர், கூடவே உமிழ்நீரையும் சேர்த்து விழுங்கியதால் நோய் நொடியின்றி இருந்தனர். உமிழ்நீர் கன்னம், கீழ்த்தாடை, கீழ்நாக்கு மற்றும் பல சிறு சிறு உமிழ்நீர்ச் சுரப்பிகளில் இருந்தும் சுரக்கிறது. அப்படி சுரக்கும் எச்சில் என்னும் உமிழ்நீரை துப்பக்கூடாது. சிலர் அடிக்கடி எச்சிலை வெளியே துப்பிக்கொண்டே இருப்பார்கள்.

உமிழ்நீர்:
சித்தர்கள் முதல் நவீன மருத்துவர்கள் வரை எச்சில் என்னும் உமிழ்நீரை துப்பக்கூடாது என்றே கூறுகின்றனர். அந்த அளவுக்கு அதில் மருத்துவக் குணம் நிறைந்துள்ளது. புளிப்பு, இனிப்பு போன்றவற்றின் சுவையை உணரும்போது வாயில் தானாகவே உமிழ்நீர் சுரக்கும். அதேபோல் ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகளைச் சாப்பிட்டாலும்கூட உமிழ்நீர் அதிகமாக சுரக்கும். உணவு உண்ணும்போது ஊறுகாயையும் சிறிதளவு எடுத்துக் கொண்டால் உமிழ்நீர் அதிகமாக சுரக்கும். அதனால்தான் நம் முன்னோர் நம் பாரம்பரிய உணவில் ஊறுகாயையும் இணை உணவாக சேர்த்துக் கொண்டனர்.

இன்சுலின்:
தூண்டல், துலங்கல் என்ற விதியின்படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கும். ஆனால், உமிழ்நீரை இயற்கையாக சுரக்க வைப்பதற்கான எந்த முயற்சிகளையும் நாம் எடுப்பதில்லை. மாறாக அவசர அவசரமாக உணவுகளை வாயில் போட்டு விழுங்குகிறோம். உமிழ்நீர் கலக்காத உணவு வயிற்றுக்குள் செல்வதால் இன்சுலின் சுரப்பு சரியாக நடப்பதில்லை. இதனால், உணவிலுள்ள குளுக்கோஸை கிளைக்கோசனாக மாற்றும் செயல்பாடு நடக்காமல் அது சர்க்கரையாகவே ரத்தத்தில் தங்கி நாளடைவில் சர்க்கரை நோயை ஏற்படுத்தி விடுகிறது.

பானங்கள்:
இவற்றை கருத்தில்கொண்டு நம் வாயில் ஊறும் உமிழ்நீர் சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுவோம். நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுடனும் உமிழ்நீரைக் கலந்து வயிற்றுக்குள் அனுப்ப பழகிக் கொள்வோம். தண்ணீர் குடிப்பது, டீ, காபி போன்ற பானங்களை அருந்தும்போது உமிழ்நீருடன் கலந்தே வயிற்றுக்குள் செல்லும். எனவே, நிறுத்தி நிதானித்துச் சாப்பிட்டால் உணவுடன் உமிழ்நீரும் சேர்ந்து சுரக்கும். இவை அனைத்துக்கும் மேலாக பசித்த பிறகே சாப்பிட வேண்டும்; அதையும் ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும். அதாவது, உமிழ்நீர் நன்றாக சுரக்குமளவு உணவை மென்று சாப்பிட வேண்டியது அவசியம்.

மாவட்ட செய்திகள்

Most Popular

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணி… நெல்லை மாவட்டத்திற்கு துணை ராணுவம் வருகை…

நெல்லை தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, நேற்று நெல்லை மாவட்டத்திற்கு மத்திய துணை பாதுகாப்பு படையினர் வந்தடைந்தனர். தமிழகத்தில் வரும்...

“இனி வன்னியர் வாழ்வில் வசந்த காலமே” ராமதாஸ் எழுதிய கடிதம்!

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் அதிமுக கூட்டணியில் இடம்பெற பாமகவின் நீண்டகால கோரிக்கையான 10.5% இடஒதுக்கீட்டை அதிமுக அரசு அளித்துள்ளது. இதற்கான...

மியான்மரில் பதற்றம்: இரும்புக்கரம் கொண்டு அடக்கும் ராணுவம் – 18 பேர் பலி!

தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகக் காரணம் காட்டி மியான்மர் ராணுவம் ஆங் சான் சூகி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்து சர்வாதிகாரத்தை அரங்கேற்றியது. உடனே ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட்...

ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் சொன்ன ரஜினி!

திமுக என்னும் மாபெரும் கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தனது 68ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கருணாநிதிக்கு பிறகு திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று, நடக்கும் முதல் சட்டமன்றத் தேர்தலில்...
TopTamilNews