வியாபாரிகளுக்கு கொரோனா – சேலம் வ.உ.சி பூ மார்க்கெட் மூடல்!

 

வியாபாரிகளுக்கு கொரோனா – சேலம் வ.உ.சி பூ மார்க்கெட் மூடல்!

சேலம்

சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் வியாபாரிகள் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, பூ மார்க்கெட் காலவரையின்றி மூடப்பட்டது.

சேலம் பழயை பேருந்து நிலையம் அருகே வ.உ.சி பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட பூக்கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், இங்கு மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பூக்களை வாங்கி செல்வது வழக்கம். இந்த நிலையில், நேற்று முன்தினம் மார்க்கெட்டில் கடை வைத்துள்ள 4 வியாபாரிகளுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.

வியாபாரிகளுக்கு கொரோனா – சேலம் வ.உ.சி பூ மார்க்கெட் மூடல்!

இதனையடுத்து அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. தொடர்ந்து, நேற்று சுகாதாரத்துறை சார்பில் மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள், தொழிலாளிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், மேலும் 2 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூ மார்க்கெட் காலவரையின்றி மூடி, மாநகராட்சி உத்தரவிட்டது.

மேலும், நோய் தடுப்பு நடவடிக்கையாக மார்க்கெட் முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பூ மார்க்கெட் மூடப்பட்டதால் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஏராளமான பூக்கள் குப்பையில் கொட்டும் அவலம் ஏற்பட்டு உள்ளது.