சேலம்- தொடர் நகைப்பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது – தனிப்படை போலீசார் அதிரடி

 

சேலம்- தொடர் நகைப்பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது – தனிப்படை போலீசார் அதிரடி

சேலம்

சேலம் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட திருச்சியை சேர்ந்த 2 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர். சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் கடந்த மாதம் 18ஆம் தேதி நடைபயிற்சிக்கு சென்ற கமலா என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் 5 சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், கொள்ளையர்களை பிடிக்க உதவி ஆணையர் யாஸ்மின் தலைமையில் தனிப்படை அமைத்து மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இந்நிலையில் கமலாவிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களின் சிசிடிவி பதிவினை கைப்பற்றிய தனிப்படை போலீசார், கொள்ளையர்கள் சேலத்தில் நகையை பறித்துக்கொண்டு திருச்செங்கோடு, ஜேடர்பாளையம், மோகனூர் வழியாக
திருச்சிக்கு சென்றதை கண்டுபிடித்தனர்.

சேலம்- தொடர் நகைப்பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது – தனிப்படை போலீசார் அதிரடி

இதனால் சேலம் முதல் திருச்சி வரையிலான பகுதியில் சாலையில் இருந்த சிசிடிவி பதிவுகளில் கொள்ளையர்கள் உருவம் பதிவானதை உறுதிப்படுத்திகொண்ட தனிப்படை போலீசார், திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த பைனான்ஸ் கடை ஊழியர் பிராங்களின்குமார் (33) மற்றும் அவரது கூட்டாளி ஆட்டோ ஓட்டுனர் மகேஸ்வரன் (29) ஆகியோரை கைதுசெய்தனர்.

விசாரணையில் பிராங்க்ளின் குமார் மீது திருச்சியில் பல்வேறு நகை பறிப்பு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. மேலும், சிறையில் நண்பர்களாகிய மகேஸ்வரனும், பிராங்க்ளின் குமாரும் அவ்வப்போது நகை பறிப்பில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு உல்லாசமாக இருந்து வந்ததும் தெரியவந்தது.

சேலம்- தொடர் நகைப்பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது – தனிப்படை போலீசார் அதிரடி

இதனையடுத்து அவர்களிடம் இருந்து 16 சவரன் தங்க நகைகள் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும், பல்வேறு இடங்களில் நடைபெற்ற நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.