கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதி: சென்னையை மிஞ்சியது சேலம்!

 

கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதி: சென்னையை மிஞ்சியது சேலம்!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடிவரும் நிலையில் சேலம் மாவட்டம் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல, சேலத்தில் வெளிமாநிலத்தவர் 3 பேர் உட்பட மேலும் 72 நபர்களுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1412 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 872 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், சேலம் அரசு மருத்துவமனைகளில் 886 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதி: சென்னையை மிஞ்சியது சேலம்!

நாளுக்குநாள் சேலத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவருவதால் சேலத்தில் வீடுவீடாக பரிசோதனை நடத்த அம்மாநகராட்சி திட்டமிட்டது. 3 லட்சத்து 19 ஆயிரம் கணக்கெடுக்கப்பட்டதில் வெறும் நான்கு பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த 5 நாட்களில் சுமார் 76 ஆயிரம் வீடுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. சளி ,இருமல் உள்ளிட்ட அறிகுறி இருந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் நான்கு பேருக்கு மட்டுமே கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகமுள்ள மாவட்டங்களில் சேலம் முதலிடம். அதிகபட்சமாக சேலத்தில் 184 இடங்களும், சென்னையில் 158 இடங்களும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.