தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது – நகை, இருசக்கர வாகனம் பறிமுதல்

 

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது – நகை, இருசக்கர வாகனம் பறிமுதல்

சேலம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வந்த 4 பேரை, தனிப்படை போலீசார் கைதுசெய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் தலைவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் வாகனதிருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதனை தடுக்க ஆத்தூர் டிஎஸ்பி இம்மானுவேல் ஞானேசேகர் தலைமையில் தனிப்படை அமைத்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், தனிப்படை போலீசார் தலைவாசல் அருகே மும்முடி

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது – நகை, இருசக்கர வாகனம் பறிமுதல்

பகுதியில் நடந்துசென்ற இளைஞரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் அம்மம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பதும், தலைவாசல் பகுதியில் நடந்த பல்வேறு இருசக்கர வாகன திருட்டு மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புடையதும் தெரியவந்தது. இதனையடுத்து ஈஸ்வரனை கைதுசெய்த போலீசார், அவர் அளித்த தகவலின் பேரில், அவரது கூட்டாளிகளான தினேஷ் குமார், ஹரிஹர சுதன், பாலு ஆகியோரையும் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து 5 பவுன் நகைகள், 2 இருசக்கர வாகனங்கள், ஒரு சரக்கு ஆட்டோ மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.