சேலம் எட்டு வழிச் சாலை வழக்கு… இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது!

 

சேலம் எட்டு வழிச் சாலை வழக்கு… இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது!

சேலம் – சென்னை எட்டு வழிச் சாலை அமைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

சேலம் எட்டு வழிச் சாலை வழக்கு… இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது!சென்னையிலிருந்து சேலத்துக்கு புதிதாக எட்டு வழி பசுமை சாலை அமைக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன. இதனால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பறிக்கப்படும், காடுகள், மலைகள் அழிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர். பொது மக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி சார்பில் இந்த திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. எட்டு வழி சாலையை அமைக்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

சேலம் எட்டு வழிச் சாலை வழக்கு… இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது!சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் இருந்தது. கடந்த மாதம் இது தொடர்பாக புதிய மனு ஒன்றை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதை ஏற்று வழக்கு விசாரணைக்கு

சேலம் எட்டு வழிச் சாலை வழக்கு… இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது!பட்டியலிடப்பட்டுள்ளது. இன்று நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது. காணொலி காட்சி வாயிலாக விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சேலம் எட்டு வழிச் சாலைக்காக நிலத்தைப் பறிகொடுக்கும் நிலையில் உள்ள விவசாயிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.