மருமகள் செல்போனில் பேசியதை கண்டித்த மாமனார்… ஆத்திரத்தில் அடித்துக்கொன்ற பெண் வீட்டார்…

 

மருமகள் செல்போனில் பேசியதை கண்டித்த மாமனார்… ஆத்திரத்தில் அடித்துக்கொன்ற பெண் வீட்டார்…

சேலம்

சேலம் அருகே மின்வாரிய ஊழியர் கொலையில் தொடர்புடையவர்களை கைதுசெய்ய கோரி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்த பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவர் உடையாபட்டி மின்வாரிய அலுவலகத்தில் கள உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பானுமதி(46). இவர்களுக்கு ஒரு மகளும், செல்வகுமார் உள்பட 2 மகன்களும் உள்ளனர். செல்வகுமார், நொரச்சிவளவை சேர்ந்த தமிழ்நிதி என்பவரது மகள் செளந்தர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான நாள் முதல் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 4ஆம் தேதி அன்று செளந்தர்யா, தனது அறை கதவை பூட்டிக்கொண்டு நீண்டநேரம் செல்போனில் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், சௌந்தர்யாவை, மாமியார் பானுமதி கண்டித்துள்ளார்.

மருமகள் செல்போனில் பேசியதை கண்டித்த மாமனார்… ஆத்திரத்தில் அடித்துக்கொன்ற பெண் வீட்டார்…

இதுகுறித்து செளந்தர்யா தெரிவித்த தகவலின் பேரில், தமிழ்நிதி, அவரது மனைவி சித்ரா மற்றும் மகன்கள் பிரசாந்த், கோகுல் ஆகியோர், கோவிந்தன் வீட்டிற்கு சென்று, கோவிந்தனையும், பானுமதியை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த கோவிந்தன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனைக்கு பின் இன்று உடல் பள்ளிப்பட்டிக்கு கொண்டுவந்த போது, மேச்சேரி பேருந்து நிலையத்தில் ஆம்புலன்ஸை சிறைபிடித்த அவரது உறவினர்கள், கொலையாளிகளை கைதுசெய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மேச்சேரி போலீசார் அவர்களை சமரசம் செய்து கலைந்து போக செய்தனர்.