சேலம்: ஊழியர்களுக்கு கொரோனா… மூடப்பட்ட தனியார் மருத்துவமனை!

 

சேலம்: ஊழியர்களுக்கு கொரோனா… மூடப்பட்ட தனியார் மருத்துவமனை!

சேலத்தில் தனியார் மருத்துவமனை ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து மருத்துவமனைக் சீல் வைக்கப்பட்டுள்ளது.
சேலம் காந்தி ரோடு பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் செவிலியர்கள் எட்டு பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. சந்தேகத்தின் பேரில் இவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், எட்டு பேருக்கும் கொரோனா உறுதியானது.

சேலம்: ஊழியர்களுக்கு கொரோனா… மூடப்பட்ட தனியார் மருத்துவமனை!
இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்தவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பணிபுரிந்து வரும் மற்ற ஊழியர்கள், மருத்துவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மருத்துவமனை சேவைகள் நிறுத்தப்பட்டன. சேலம் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் வந்து கிருமிநாசினி தெளித்து மருத்துவமனை வளாகத்தை தூய்மைப்படுத்தினர். மேலும் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சேலம்: ஊழியர்களுக்கு கொரோனா… மூடப்பட்ட தனியார் மருத்துவமனை!
சில தினங்களுக்கு முன்பு சேலம் அம்மாபேட்டை பகுதியில் இயங்கிவந்த தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் இரண்டு மருத்துவமனைகள் மூடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் தற்போது 836 கொரோனா நோயாளிகள் உள்ளனர். நேற்று மட்டும் 99 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.