Home மாவட்டங்கள் சேலம் பிரசவம் முடிந்து வீடுதிரும்பிய இளம்பெண், 3 மாத குழந்தையுடன் தற்கொலை

பிரசவம் முடிந்து வீடுதிரும்பிய இளம்பெண், 3 மாத குழந்தையுடன் தற்கொலை

சேலம்

பிரசவம் முடிந்து வீடுதிரும்பிய இளம்பெண், 3 மாத குழந்தையுடன் தற்கொலை

ஆத்தூர் அருகே பிரசவத்திற்கு சென்று திரும்பிய இளம்பெண், 3 மாத கைக்குழந்தையுடன், வீட்டில் தூக்கில் தொங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் சார்வாய்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (34). இவருக்கு தவமணி (27) என்ற மனைவியும், யாஷிகா என்ற 3 மாத குழந்தையும் உள்ளனர். தவமணி பிரசவத்திற்காக காட்டுகோட்டையில்

பிரசவம் முடிந்து வீடுதிரும்பிய இளம்பெண், 3 மாத குழந்தையுடன் தற்கொலை

உள்ள தனது அக்கா ஜீவாவின் வீட்டிற்கு சென்றுவிட்டு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் நேற்றிரவு தவமணியின் அக்கா ஜீவாவை தொடர்புகொண்ட உறவினர்கள், தவமணி மற்றும் அவரது குழந்தை தூக்கில் தொங்கி கொண்டிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜீவா, கணவர் தனசேகருடன் சார்வாய்புதூர் சென்று இருவரது சடலத்தையும் மீட்பதற்காக வீட்டின் கதவை உடைக்க முயன்றுள்ளார்.

பிரசவம் முடிந்து வீடுதிரும்பிய இளம்பெண், 3 மாத குழந்தையுடன் தற்கொலை

இதற்கு கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதனை பொருட்படுத்தாமல் கதவை உடைத்து தாய் மற்றும் சேயின் உடலை தனசேகர் மீட்டார். தகவல் அறிந்து அங்கு வந்த தலைவாசல் போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தனது மகள் மற்றும் பேரக்குழந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டிய தவமணியின் பெற்றோர், மணிகண்டனை

பிரசவம் முடிந்து வீடுதிரும்பிய இளம்பெண், 3 மாத குழந்தையுடன் தற்கொலை

கைதுசெய்து விசாரிக்க கோரி தலைவாசல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மணிகண்டன் மற்றும் கிராமத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, திருமணம் நடைபெற்று 5 ஆண்டுகளே ஆவதால், இந்த வழக்கு குறித்து ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

பிரசவம் முடிந்து வீடுதிரும்பிய இளம்பெண், 3 மாத குழந்தையுடன் தற்கொலை
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 58 சரவன் நகை கொள்ளை!

கரூர் கரூர் அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் 58 சரவன் தங்க நகைகளை திருடி சென்றனர். கரூர்...

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த 3 பெண்கள் முன்ஜாமீன் மனு – உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சுசில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார். மாணவிகளை மூளைச் சலவை செய்ததாக...

2 ஜிபி இலவச டேட்டா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் – கமல்ஹாசன் ட்வீட்!

கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஏழை மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கும் திட்டத்தை...

’’அணில் ராமேஸ்வரம் to இலங்கைக்கு பாலமே கட்டியிருக்கும் போது, கரண்ட் கம்பிய கடிக்காதா?’’

மின்தடை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன ’அணில்’ பதில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. மின் கம்பிகளின் மீது அணில்கள் ஓடுவதால் கம்பிகள் ஒன்றோடு...
- Advertisment -
TopTamilNews