மகாராஷ்டிராவில் பீடி, சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை

 

மகாராஷ்டிராவில் பீடி, சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அம்மாநில அரசும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையில் தீவிரமாக செயலாற்றி வருகிறது.

மகாராஷ்டிராவில் பீடி, சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது. அதன்படி, அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் பீடி, சிகரெட், பீடி, பான்மாசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் சிகரெட் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை யாரேனும் மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில்லறை விற்பனையில் சிகரெட்டுகள் பாக்கெட் இல்லாமல் விற்கப்பட்டதால் தடை செய்யப்பட்டுள்ளது, புகைபிடித்தால் புற்றுநோய்கள் வருகின்றன. இதய நோய்களும் வருகின்றன. எனவே புகைப்பழக்கத்தின் தீங்குகளைப் பற்றிய பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு தடை விதித்துள்ளது.